
ரவை இனிப்பு புட்டு
தேவை;
ரவை - 1 கப்
சர்க்கரை - 2 கப்
பால் -1 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
செய்முறை:
ரவையை வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும். அதனுடன் பால் சேர்த்து பிசைந்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் நெய் விட்டு, வெந்த ரவையை போட்டு, சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறி இறக்கினால், சுவையான ரவை இனிப்பு புட்டு தயார்.
கம்பு புட்டு
தேவை;
கம்பு - 1 கப்
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு -1 சிட்டிகை
செய்முறை;
கம்பு தானியத்தை சுத்தம் செய்து, வறுத்து, மாவாக பொடித்துக் கொள்ளவும். சிறிது உப்பு கரைத்த நீரை தெளித்து, மாவில் பிசிறி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பின்னர் இதனுடன் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறிவிட்டால் சுவையான, சத்தான கம்பு புட்டு தயார்.
சிவப்பரிசி புட்டு
தேவை;
சிவப்பரிசி - 1 கப்
தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்
உப்பு - சிறிது
செய்முறை:
சிவப்பரசியை வறுத்து, அரைத்து, பின்னர் இதில் உப்பு சேர்த்த நீரை தெளித்து, தெளித்து மாவில் பிசிறி ஒருமணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இட்லி தட்டுகளில் மாவை நிரப்பி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். அதில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி, எடுத்து வைத்தால், புதுமையான சிவப்பு அரிசி புட்டு தயார்.
கோதுமை புட்டு
தேவை;
கோதுமை - 1 கப்
உப்பு - சிறிது
தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்
செய்முறை:
கோதுமையை வறுத்து மாவாக அரைக்கவும். அதில் உப்பு சேர்த்த நீரை தெளித்து, பிசிறி, அரைமணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அந்த மாவை இட்லி தட்டுகளில் நிரப்பி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பிறகு அதில் தேங்காய்த் துருவலை போட்டுக் கிளறி விட்டால் சுவையான, சத்தான கோதுமை புட்டு தயார்.