
கலவை சமோசா
செய்யத் தேவையான பொருட்கள்:
மைதா- 2கப்
உப்பு, நீர், எண்ணெய்-தேவையான அளவு
டூட்டி ஃப்ரூட்டி_1/2கப்
பேரீச்சம் பழம், கிஸ்மிஸ்- பொடியாக அரிந்து பிசைந்தது-1/2கப்
முந்திரி, பாதாம், பிஸ்தா- மூன்றையும் நொறுக்கியது -கால் கப்
செய்முறை:
மைதாவில் சிறிதளவு எண்ணெய், உப்பு , தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து அரைமணி நேரம் ஊறவிடவும். கொடுத்துள்ள மற்றைய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, நன்றாகப் பிசைந்து, கொஞ்சம் நசநசப்பாக கலவை சமோசாவில் ஒட்டும்படி வைத்துவிடவும்.
சிறிது மைதா மாவை தண்ணீரில் கரைத்து பேஸ்ட் போல் செய்து வைக்கவும்.
உருட்டி வைத்திருக்கும் மைதாவை சப்பாத்திக்கல்லில் திரட்டி, அதை தோசைக்கல்லில் லேசாக சூடாக்கி இரண்டாக வெட்டவும். அதை முக்கோணமாக மடித்து, அதற்குள் பூரணத்தை வைத்து, மைதா பேஸ்டால் நன்றாக ஓரங்களை ஒட்டி, கொதிக்கும் எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும். கலவை சமோசா ரெடி. சாப்பிடுவதற்கு சத்தான வித்தியாசமான ருசியில் அசத்தும் சமோசா இது. குழந்தைகள் ஏக குஷியில் சாப்பிடுவார்கள்.
வெஜிடபிள் கொழுக்கட்டை
செய்யத் தேவையான பொருட்கள்:
அரிசி மாவு- இரண்டு கப் , உப்பு, எண்ணெய், தண்ணீர்- தேவையான அளவு
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மூன்றையும் பொடியாக நறுக்கி வேகவைத்தது -2கப்
மிளகாய்ப் பொடி- ஒரு டீஸ்பூன் கரம் மசாலா -சிறிதளவு
செய்முறை:
கொதிக்கும் தண்ணீரில் உப்பு சிறிதளவு, எண்ணெய், அரிசி மாவு சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும். வேகவைத்த காய்கறியுடன் மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு கலந்து வைக்கவும். அரிசி மாவை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து, அதற்குள் பூரணத்தை வைத்து மூடி, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, இட்லி தட்டுகளில் கொழுக்கட்டைகளை பரப்பி வேகவைத்து எடுக்கவும். இதை எப்பொழுதும் செய்து சாப்பிடலாம். இந்த வெஜிடபிள் காரக் கொழுக்கட்டை நாவிற்கு நல்ல ருசியைத்தரும்.