

சமையலில் பச்சை பட்டாணி இனிமையான சுவை, நிறம், மற்றும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பட்டாணியில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள மிகவும் நல்லது.
பச்சை பட்டாணி கறி
தேவையான பொருட்கள்:
பச்சைப்பட்டாணி – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
பூண்டு _ 4 பல்
இஞ்சி – 1 inch
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ ஸ்பூன்
மல்லிதூள் – 1 ஸ்பூன்
கரம்மசாலா – ½ ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு எல்லாம் அரைத்து விழுதாக்கி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, இந்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மசாலா தூள்கள் சேர்த்து வதக்கவும். பச்சை பட்டாணி மற்றும் தேவையான நீர் சேர்த்து மூடி வேகவைக்கவும். கடைசியில் கரம்மசாலா, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். ரொட்டி, சப்பாத்தி, தட்டைகளுக்கு சூப்பராக இருக்கும்.
பச்சை பட்டாணி புலாவ் (Peas Pulao)
தேவையான பொருட்கள்;
பாஸ்மதி அரிசி – 1 கப்
பச்சை பட்டாணி – ½ கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இலவங்கம் – 2
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
உப்பு – தேவைக்கு
நெய்/எண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை:
அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் நெய் ஊற்றி இலவங்கம், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பச்சை பட்டாணி சேர்த்து சிறிது வதக்கவும். ஊறவைத்த அரிசி, உப்பு, மற்றும் 2 கப் நீர் சேர்த்து வேகவிடவும்.
அவித்த முட்டை, ராய்த்தா, உருளைக்கிழங்கு ஃப்ரை ஆகியவற்றுடன் அற்புதம்.
பச்சை பட்டாணி வடை (Green Peas Vada)
தேவையான பொருட்கள்;
பச்சை பட்டாணி – 1 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சைமிளகாய் – 2
இஞ்சி – 1 inch
பூண்டு – 3 பல்
சீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சில
கொத்தமல்லி – 2 ஸ்பூன்
ரவை/அரிசி மாவு – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
பச்சை பட்டாணியை 10 முதல் 15 நிமிடம் நன்றாக மென்மையாக வேகவைக்கவும். குழையாமல் கையில் பிசையக்கூடிய அளவுக்கு மட்டும் இருக்க வேண்டும். வேகவைத்த பட்டாணியை வடிகட்டி பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம், பெரிய வெங்காயம் இவற்றுடன் சேர்த்து மெலிதாக மசித்த மாதிரி அரைக்கவும். (அதிகமாக விழுதாக அரைக்க வேண்டாம்) அரைத்த கலவையில், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், ரவை/அரிசிமாவு, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை கையில் உருட்டும்போது ஒட்டாமல் இருக்க வேண்டும்.
சிறிய லேசான வட்ட வடிவமாக தட்டி வைக்கவும். காய்ந்த எண்ணெயில் மிதமான சூட்டில் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும். சூடு அதிகமாக இருந்தால் வெளியே மட்டும் கருகி உள்ளே நன்றாக வேகாது. மிதமான சூடு சரியானது.
பச்சை பட்டாணியை பல்வேறு முறைகளில் சமைத்து சுவைக்கும் போது, இது ஒரு சுமாரான காய்கறி அல்ல என்பதைக் புரிந்து கொள்ளலாம். மதிய உணவாகவும், மாலை நேர ஸ்நாக்ஸாகவும், இரவு டின்னராகவும் பட்டாணி ரெசிபிகளை எளிதாக சேர்த்துக்கொள்ளலாம்.