சத்தான கருப்பு கவுனி அரிசி தோசை & மொறு மொறு ரவா போண்டா!
கருப்பு கவுனி அரிசி தோசை
தேவையான பொருட்கள்:
கருப்பு கவுனி அரிசி - 2 கப்.
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்.
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
கருப்பு கவுனி அரிசியை கழுவி 5 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி, உளுந்து, வெந்தயம் கழுவி , 1 மணி நேரம் ஊறவிடவும். அனைத்தும் ஊறிய பின் மிக்ஸி அல்லது கிரைண்டரில் நைசாக உப்பு சேர்த்துதோசை மாவு பதத்தில் அரைத்து எடுத்து வைக்கவும்.
8 மணி நேரம் புளித்த பின் அடுத்த நாள் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை தோசைக்கல்லில் தடவி எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
மொறு மொறு வென சத்தான கருப்பு கவுனி அரிசி தோசை ரெடி.
தேங்காய் சட்னி, இட்லி மிளகாய் பொடி தொட்டு சாப்பிட ருசியோ ருசிதான். பெண்கள், குழந்தைகள், அனைவருக்கும் ஏற்றது. செய்து பாருங்கள்.
ரவை - உருளை போண்டா
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
தயிர் - 1/2கப்
உருளை கிழங்கு - 2 (வேக
வைத்து மசித்தது)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ரவை அதனுடன் தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கால்மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின் மாவில், வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அடித்து பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சிறிய தணலில் சிறு உருண்டைகளாக உருட்டி போண்டாக்களாக இருபுறமும் திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மொறு மொறு சுவையான ரவை உருளை போண்டா ரெடி. சிவப்பு மிளகாய் தேங்காய் சட்னியுடன் சாப்பிட ருசி அள்ளும். திடீர் விருந்தினர் வந்தால் உடனே செய்து விடலாம். செய்து அசத்துங்கள்.