சத்தான பானங்கள், சுவையான இனிப்புகள்: வீட்டிலேயே செய்யலாம்!

Healthy samayal tips in tamil
Nutritious drinks
Published on

மாதுளம்பழ மில்க் ஷேக்

தேவையானது:

மாதுளம்பழம் - 1

சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்.

காய்ச்சி ஆறிய பால் - 2 டம்ளர்.

ஏலத்தூள் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

மிக்ஸியில் மாதுளை முத்துக்களை லேசாக அடித்து அதில் சர்க்கரை, பால், ஏலத்தூள் அரைத்து வடிகட்டி ஊற்றவும். பின் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து டம்ளரில் ஊற்றி மேலே மாதுளை முத்துக்கள் சிறிதுபோட்டு ஜில்லென்று குடிக்கலாம். சுவையான சுலபமான மாதுளம் பழம் மில்க் ஷேக் ரெடி. வெயில் காலத்தில் இதனைக் குடிக்க வயிறு குளு குளுவென  இருக்கும்.

ஆப்பிள் - பனானா மில்க் ஷேக்

தேவையானது:

நேந்திரம் பழம் - 1/2 (பாதி)

ஆப்பிள் - 1/2 (பாதி)

 காய்ச்சி ஆறியபால் - 1 1/2 டம்ளர்.

அலங்கரிக்க - பாதாம் -3

செய்முறை:

மாப்பிள்ளை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வாழைப்பழத்தில் மருந்து மிக்சியில் சேர்த்து உடனே சர்க்கரையின் சேர்த்து ஒரு முறை அரைக்கிறது அதன் பின் காலை ஊற்றி நன்றாக அரைத்து டம்ளரில் ஊற்றவும். பாதாமை தோல் சீவி மேலே அலங்கரிக்கவும் .சுவையான

சத்தான ஆப்பிள், பனானா மில்க் ஷேக் ரெடி குளிரவைத்தும் குடிக்கலாம்.

முலாம்பழ மில்க் ஷேக்:

தேவையானது:

முலாம்பழம் துண்டுகள் - 1/2 கப்

 காய்ச்சி ஆறியபால் - ஒரு

 டம்ளர் 

ஆர்கானிக் சுகர் - 1/4 கப்.

அலங்கரிக்க - முலாம்பழம் துண்டுகள் - ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

மிக்ஸியில் முலாம்பழத்தை விதைகளை நீக்கி தோல் சீவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிபோட்டு, ஆர்கானிக் சுகரையும் சேர்த்து நைசாக அரைத்து, அதில் பாலை சேர்த்து பல்ஸ் மோடி வைத்து அரைக்கவும். பின் டம்ளரில் ஊற்றவும் மேலே முலாம்பழ துண்டுகள் சிறிது சேர்த்து குளிரவைத்து பருகலாம். முலாம்பழ மில்க் ஷேக் ரெடி. சத்தானது. குழந்தைகள் விரும்பிக்குடிப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
ஒரே மாதிரியான பச்சடிகள் சாப்பிட்டு போர் அடிக்கிறதா? இதோ பலவிதமான பச்சடிகள்!
Healthy samayal tips in tamil

பால் நட்ஸ் பவுடர்

தேவையானது:

காய்ச்சிய ஆறிய பால் - 2 டம்ளர்.

பாதாம், முந்திரி, பிஸ்தா - 1/4 கப்

பூசணி விதை - 1டேபிள்ஸ்பூன்

ஏலக்காய் - 1

குங்குமப் பூ - 1 பின்ச்

செய்முறை:

அடுப்பில் வெறும் வாணலியில் பாதம் ,முந்திரி, பூசணி விதையை தனித்தனியாக வறுக்கவும். மிக்ஸியில் நைஸாக அரைத்து கடைசியில் ஏலக்காய் குங்குமம் பூ சேர்த்து அரைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் அரைத்த நட்ஸ் பவுடர் சேர்த்து கொதிக்க விடவும்.

உதித்ததும் மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவைத்து நாட்டு சக்கரை சேர்த்து கலந்து கரைந்ததும் அடுப்பை அணைக்கவும். மிகவும் வாசனையாக இருக்கும். சத்தான சுவையான நட்ஸ் பவுடர் பால் ரெடி.

இது குழந்தைகளுக்கு சத்தான ஆரோக்கியத்திற்கு உகந்தது.

பால் அல்வா

தேவையானது:

கிரீம் பால் - 1 லிட்டர்

வெள்ளை சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்.

நெய் - 4 டேபிள் ஸ்பூன்.

ஏலத்தூள் - சிறிது.

இதையும் படியுங்கள்:
வண்ணமும் வாசமும் நிறைந்த கலவை கேக்கும், முளைகட்டிய பயறு வடையும்!
Healthy samayal tips in tamil

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பொங்கி வந்தவுடன் சிம்மில் வைத்து ஆடை படிய படிய அப்படியே அதை சேர்க்க வேண்டும் ஆடையெல்லாம் ஒன்றாக சேர்த்து பால் சுண்டி வரும்போது நெய் சிறிது சிறிதாக சேர்ந்து ஊற்றி கிளறவேண்டும். வாணலியில் ஒட்டாமல் வரும்போது ஏலத்தூள் தூவி பிளேட்டில் ஊற்றவும்.

சுவையான பால் அல்வா ரெடி. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். செய்து அசத்தலாம். பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com