
எப்போதும் தக்காளி வெங்காய தயிர் பச்சடி சாப்பிட்டு அலுத்து போனவர்கள் இந்த வித்தியாசமான தயிர் பச்சடிகளை செய்து குடும்பத்தினரை அசத்தலாம்.
தோல் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கிய பைனாப்பிள் உப்பு சேர்த்து வதக்கி கடுகு பச்சை மிளகாய் தாளித்த தயிரில் கலந்து பரிமாறலாம்.
புதினா கொத்தமல்லி இளம் கறிவேப்பிலை ஒரே ஒரு கற்பூரவல்லி இலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிய பின் வதக்கி உப்பு தயிர் மிளகு சீரகப் பொடி கலந்தால் ஹெர்பல் பச்சடி ரெடி.
பெரிய நெல்லிக்காயை குக்கரில் வேகவைத்து கொட்டை நீக்கி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து உப்பு சேர்த்து கடுகு தாளித்தால் நெல்லிக்காய் பச்சடி ரெடி ஆகிவிடும்.
முருங்கை பூவை பறித்து நெய்யில் வதக்கி தயிரில் கலந்து கடுகு வரமிளகாய் கருவேப்பிலை தாளித்துக் கொட்டி தயிர் பச்சடி செய்யலாம் இதே போல் அகத்திப்பூவையும் பொடியாக நறுக்கி போட்டு தயாரிக்கலாம் தேங்காய் துருவல் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
கத்தரிக்காயின் மேல் எண்ணெய் தடவி தணலில் சுட்டு தோல் விதை நீக்கி வைத்துக்கொண்டு தக்காளி பழத்தை வெந்நீரில் போட்டு தோல் நீக்கி கத்திரிக்காயுடன சேர்த்து பிசைந்து தயிரில் சேர்க்க வேண்டும் உப்பு சேர்த்து வரமிளகாய் தாளித்துக் கொட்டினால் சூப்பரான சுவையாக பச்சடி இருக்கும்
வெண்டைக்காயை மெல்லிய வில்லைகளாக நறுக்கி எண்ணெயில் பொரிக்க வேண்டும் தயிரில் உப்பு சேர்த்து கடுகு வரமிளகாய் தாளிக்க வேண்டும் பரிமாறுவதற்கு முன்பு வெண்டைக்காயைகலந்து பரிமாறினால் வெண்டைக்காய் சுவையோடு பச்சடி பிரமாதமாக இருக்கும்.
கெட்டி தயிரில் கடுகு பச்சை மிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டி உப்பு இரண்டாக நறுக்கி விதை எடுத்த பன்னீர் திராட்சை கலந்து பரிமாறலாம்.
தயிர் பச்சடியை அலங்கரிக்க காரா பூந்தி எண்ணெயில் பொரித்த ஜவ்வரிசியை பயன்படுத்தினால் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
நீர் விட்டுக்கொள்ளும் வாழைத்தண்டு வெள்ளரி தக்காளி போன்றவற்றில் பச்சடி செய்தால் நீர் வீணாகிறதா? பரிமாறுவதற்கும் சங்கடமாக உள்ளதா அதில் வற்றலையோ சிப்ஸையோ போட்டால் நீரை வைத்துக் கொள்ளும் பச்சடிக்கும் புதிய சுவையாக இருக்கும்.
கோஸை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்து தயிரில் போட்டு கடுகு உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்துக் கொட்ட வேண்டும் கோஸ் தயிர் பச்சடி சுவையுடன் நன்றாக இருக்கும்.
கேரட்டை துருவி தயிரில் போட்டு பச்சை மிளகாய் நடுவில் கீறி விட்டு கேரட் தயிர் பச்சடியுடன் கலக்க வேண்டும் பிறகு தேவையான அளவு உப்பு போடவேண்டும் பிறகு மல்லித்தழையினை நறுக்கி போட கேரட் பச்சடி சூப்பராக இருக்கும்.
அரு நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக்கொண்டு எண்ணெயில் பச்சை மிளகாய் தேங்காயையும் வதக்கி எல்லாவற்றையும் கலந்து சூப்பரான அரு நெல்லிக்காய் பச்சடி தயாராகிவிடும்.
வெள்ளரிக்காயை நைசாக நீல வாக்கில் நறுக்கி தயிர் ஊற்றி ஊற வைத்துக்கொள்ள வேண்டும் நறுக்கிய மிளகாய் இரண்டு இதில் போட்டு உப்பை சேர்க்கவேண்டும் கடுகு உளுத்தம் பருப்பு வரமிளகாய் தாளித்து இந்த தயிர் பச்சடியில் ஊற்றி சாப்பிட்டால் உடல் குளுமையாக இருக்கும்.