
பிஸிபேளாபாத், பகாளாபாத் தயாரிக்கையில் சாதத்தோடு வெண்ணெய் சேர்க்க, ஆறினாலும் கெட்டியாக இல்லாமல் தளர இருக்கும்.
கலந்த சாதனங்களில் நிலக்கடலை, மு பருப்பு சேர்த்து கலந்து விட்டு பரிமாறும் முன் காராபூந்தி தூவி பரிமாற சுவை அதிகரிக்கும்.
அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் தயாரிக்கையில் வெல்லப் பாகுடன் கொஞ்சம் ஜவ்வரிசி வேகவைத்த தண்ணீர் அல்லது சின்ன ஜவ்வரிசி வெந்ததை சேர்க்க பளபளப்பாக பார்க்கவும், சுவைக்கவும் நன்றாக இருக்கும்.
அப்பளம், வற்றல் பொரிக்கும்போது எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை சிம் ல் வைத்து பொரிக்க ஒரே மாதிரி பொரிந்து கருகாமல் வரும்.
இட்லி தயாரிக்கையில் ஸ்டஃப்ட் இட்லியாக காய்கறி வைத்து, தே துருவல் பேரீட்சை கலவை, முட்டை ஆம்லேட் ஸ்டஃப் பண்ணி கொடுக்க சுவையோடு சத்தும் சேரும்.
லெமன் சேர்த்து செய்யும் எந்த பதார்த்தங்களிலும் ஜுஸை நேரடியாக சேர்க்க லெமனின் வாசனையோடு, கசக்காமல் நன்றாக இருக்கும்.
அடை, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா தயாரித்து இறக்கும் போது தே எண்ணெய் ஊற்றி கலந்துவிட்டு இறக்க நல்ல வாசனையோடு சுவையாக இருக்கும்
சிறுதானிய சேமியா செய்கையில் சேமியாவை ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்துவிட்டு வழக்கமான தாளிப்புடன் தண்ணீர் கொதிக்கும்போது கரம் மசாலா-1/2டீஸ்பூன்,கறிமசாலா-1/2டீஸ்பூன் சேர்த்து கொதித்ததும் சேமியா போட்டு வெந்ததும் இறக்க சுவையாக இருக்கும்.
அம்மிணிக் கொழுக்கட்டை செய்யும்போது வெந்த கொழுக்கட்டை களை தனியே வைத்துக்கொண்டு கடுகு, உ பருப்பு, பெருங்காயம் தாளித்து கருவேப்பிலை, வெந்த கொழுக்கட்டைகளை சேர்த்து, 2டேபிள் ஸ்பூன் இட்லி பொடி தூவி தே எண்ணெய் ஒரு டீஸ்பூன் கலந்து இறக்க சுவையாக இருக்கும்.
குருமா செய்யும்போது தேங்காய் அதிகம் சேர்க்காமல் கொஞ்சம் தேங்காயுடன், கசகசா, பொட்டுக்கடலை, 2மு பருப்பு அரைத்து சேர்த்து கொதிக்க விடவும். வெந்த உ கிழங்கு ஒன்றை மசித்து கலக்க குருமா திக்காக சுவையாக இருக்கும்.
சமையலுக்கு ஒரே வகையான எண்ணையை உபயோகிக்காமல், 2,3எண்ணைய்களை உபயோகிக்க சத்து சேர்ந்து உடல் ஆரோக்கியம் மேம்படும்.
எந்த வகை வடை செய்தாலும் ஊறவைத்த பாசிப்பருப்பை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து செய்ய நல்ல கரகரப்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.