
சமையல் முறைகள் என்பது உணவைச் சமைக்க பயன்படுத்தப்படும் பல்வேறு நுட்பங்களையும் முறைகளையும் குறிக்கிறது. உலகில் எத்தனையோ சமையல் முறைகள் உள்ளன. சமையல் முறைகள் உணவின் சுவை, அமைப்பு, மற்றும் சத்துக்கள் ஆகியவற்றை மாற்ற உதவுகின்றன. அதில் ஆரோக்கியமானது எது என்பதை பார்க்கலாம்.
ஆவியில் வேகவைத்து சமைத்தல்: இந்த முறையில் சமையல் செய்வதால் நீரில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் பி மற்றும் சி .நீங்கள் சமைக்கப்படும் உணவுகளில் தக்க வைக்கப்படுகிறது.அதே வேளையில் சமைக்கும் உணவுகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகரிக்க உதவுகிறது.தென் இந்தியாவில் பெரும்பாலான பொரியல்கள் இந்த முறையில்தான் சமைக்கப்படுகின்றன.
குறைந்த வெப்பத்தில் சமைத்தல்: இந்த முறையில் சமைக்கப்படும் உணவுகளில் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ஏ,டி,ஈ, கே போன்றவைகள் தக்க வைக்கப்படுகிறது. அதே வேளையில் ஆன்டிஆக்ஸிடன்ட்களான காரோட்டினாய்ட்ஸ் அதிகரிக்கும்.
ஆசியாவில் இந்த சமையல் முறை பிரபலமாக உள்ளது. குறைந்த வெப்பத்தில் சமைப்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக்கட்டுப்படுத்த உதவுகிறது என்கிறார்கள் அமெரிக்க உணவியல் ஆராய்ச்சியாளர்கள்.உணவை அதிக வெப்பத்தில் சமைத்தால் உணவுகளில் இரசாயன நச்சுத்தன்மை அதிகரிக்கும் அது இரத்தக்குழாய்களை கடினமாக்கிவிடும் என்கிறார்கள்.
கிரில் சமையல்: இறைச்சி உணவுகளை கிரில் முறையில் சமைப்பதால் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் தக்கவைக்கப்படுகின்றன மேலும் உணவுகளில் தாதுக்கள் அதிகரிக்கவும் உதவுகிறது. இறைச்சி உணவுகளான மட்டன், சிக்கன் போன்றவைகளை இந்த முறையில் சமைப்பது நல்லது.ஓவனில் சமைப்பது விட மற்றும் எண்ணெய்யில் பொரிப்பதைவிட சிறந்தது.
வேகவைத்து/ பிரசர் குக்கரில் சமைத்தல்: குறைந்த நீரில் வேகவைத்து அல்லது குக்கரில் சமைப்பதால் சமைக்கப்படும் உணவுகளில் உள்ள சத்துக்கள் அப்படியே தக்கவைக்கப்படுகின்றன. இதில் சூப் மற்றும் பருப்புகள் சமைக்கப்படும்போது ஓவர் குக்யை தவிர்க்கவேண்டும்.
உணவை ஊறவைத்து சமைத்தல்: அரிசி, பருப்புகள் போன்றவைகள் ஊறவைக்கும் முறையில் சமைப்பதால் குடல் ஆரோக்கியம் காக்கும் புரோபயாடிக் சத்து அதிகரிக்கும்.உணவுகளின் தாவர உடற்கூறுகள் அதிகரிக்கும்.
முளைகட்டி உணவுகள் சமைத்தல்: இந்த முறையில் பயறு மற்றும் தானியங்களை முளை முளைகட்டி சமைத்தால் சத்துக்கள் அதிகரிக்கும்.செரிமானம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது, வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது. சமைத்த உணவில் அமினோ அமிலங்கள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகரிக்கிறது.
மைக்ரோ ஓவன் சமையல்: இதில் உணவுகள் குறைந்த நீரில் விரைவில் சமைக்கப்படுவதால் உணவுகளில் சத்துக்கள் தக்க வைக்கப்படுகிறது. இதில் குறைந்த வெப்பத்தில் சமைப்பது சிறந்தது. ஊட்டச்சத்துகளின் மீது குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் சமையல் முறைகளில் மைக்ரோவேவ் சமையல் ஒன்றாகும்.
காரணம், மைக்ரோவேவில் சமைக்கும்போது, மிகக் குறைந்த நீரே பயன்படுத்தப்படும். மைக்ரோவேவ், உணவை உள்ளே இருந்து சூடாக்குகிறது. இது ஊட்டச்சத்துகளை அழிக்காததால், மற்ற சமையல் முறைகளைவிட இது அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தக்கவைக்கிறது.
மைக்ரோவேவ் அவனில் மிகக்குறுகிய காலத்தில் சமைப்பதால், அதிகநேர வெப்பத்தால் அழிக்கப்படும் வைட்டமின் சி மற்றும் பிற கூறுகளும் பாதுகாக்கப்படுகின்றன.
இது புரதங்கள், லிப்பிடுகள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றில் குறைவான விளைவை ஏற்படுத்தும். மைக்ரோவேவில் சமைக்கும்போது, பாதுகாப்பான கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கொள்கலன்கள் நல்லதல்ல என்று அறிவுறுத்தப்படுகிறது.