
தேங்காய் துவையல்
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 1 கப்,
புளி - கோலிகுண்டு அளவு,
நறுக்கிய வெங்காயம் - 2
வர மிளகாய் - 3,
கல் உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
தேங்காய் துருவல், வரமிளகாய், உப்பு, புளி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துவிட்டால் சுவையான தேங்காய் துவையல் தயார். இந்தத் தொழிலுக்கு தாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்திற்கு பிசைந்தும் சாப்பிடலாம்.
பச்சைத் துவையல்
தேவை:
புதினா நறுக்கியது - அரை கப்,
மல்லித்தழை நறுக்கியது - அரை கப்
புளி - கோலிகுண்டு அளவு
தேங்காய் துருவல் - அரை கப்
நறுக்கிய வெங்காயம் - அரை கப்
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
கல் உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
புதினா, மல்லித்தழை, வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கல் உப்பு, புளி, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் சிறிது நீர்விட்டு அரைக்கவும். வதக்காமல், வறுக்காமல் செய்யப்படுவது இதன் சிறப்பு. எல்லா டிஃபனுக்கும் தொட்டுக்கொள்ள ஏற்ற துவையல் இது.
மாங்காய் துவையல்
தேவை:
மாங்காய் - 1
தேங்காய் துருவல் - 1 கப்,
பெருங்காயத்தூள் - சிறிது
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை ஆர்க்கு - 1
கல் உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
மாங்காய், தேங்காய் இரண்டையும் அரைக்கவும். கல் உப்பு, பச்சை மிளகாய் இவற்றையும் அரைத்து, மாங்காய், தேங்காய் விழுதுடன் கலந்து, பெருங்காயத்தூள் சேர்த்து, சிறிது நீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். இதற்கு புளி தேவையில்லை.
பீட்ரூட் துவையல்
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் துருவல் - 1 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
இஞ்சி துருவல் - அரை ஸ்பூன்
புளி - கோலிகுண்டு அளவு,
கல் உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
பீட்ரூட் துருவல், தேங்காய் துருவல், இஞ்சித் துருவல், வர மிளகாய், புளி, உப்பு எல்லாவற்றையும் அரைத்து எடுத்து வைத்தால், இனிப்பு, புளிப்பு, காரம், சுவையுடன் கூடிய பீட்ரூட் துவையல் தயார். பூரி, சப்பாத்தி, தோசை, இட்லி எல்லாவற்றிற்கும் தொட்டுக்கொள்ள பொருத்தமான துவையல் இது.