
தயிர் பொரி
தேவை:
பொரி - 3 கப்
தயிர் 1 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
தாளிக்க - கடுகு, பச்சை மிளகாய் ஒன்று, இஞ்சித் துருவல் அரை ஸ்பூன், மல்லித்தழை சிறிது, நெய் ஒரு ஸ்பூன்
செய்முறை:
ஒரு கரண்டியில் நெய்விட்டு, கடுகு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் போட்டு, தயிரில் கொட்டி, உப்பு சேர்த்து, மல்லித்தழை தூவி, பொரியில் போட்டு கலக்கினால், வெயிலுக்கு இதமான தயிர் பொரி தயார்.
பொரி மிக்சர்
தேவை:
பொரி - 3 கப்
பொட்டுக்கடலை நிலக்கடலை - தலா 3 டேபிள்ஸ்பூன்
வர மிளகாய் - 2
மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
தாளிக்க - எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கருவேப்பிலை தாளித்து வரமிளகாயை உடைத்து போட்டு மஞ்சள்தூள் போட்டு, பொட்டுக்கடலை நிலக்கடலையை வறுத்து, பொரியில் போட்டு, உப்பு தூவி, அடுப்பை மிதமாக எரிய விட்டு கிளறி இறக்கி வைக்கவும். சுவையான மொறு மொறு பொரி மிக்சர் தயார்.
பொரி மசாலா
தேவை:
பொரி - 3 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கேரட் துருவல் - 3 ஸ்பூன்
இஞ்சி துருவல் - அரை ஸ்பூன்
தக்காளி - 1
வறுத்த கடலை - அரை கப்
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சித் துருவல், கேரட் துருவல், உப்பு, வறுத்த கடலை எல்லாவற்றையும் பொரியில் சேர்த்து கிளறினால், சுவையான பொரி மசாலா தயார்.
பொரி உருண்டை
தேவை:
பொரி - 3 கப்
நாட்டு சர்க்கரை - அரை கப்
ஏலக்காய் தூள் - சிறிது
பொட்டுக்கடலை, நிலக்கடலை - தலா 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
நாட்டு சர்க்கரையில் சிறிது நீர்விட்டு, சூடாக்கி, கரைத்து, வடிகட்டி, இளம் பாகு காய்ச்சவும். பொட்டுக்கடலை, நிலக்கடலையை வறுக்கவும். பொறியில் வறுத்த பொட்டுக்கடலை, நிலக்கடலை, ஏலக்காய் தூள் கலந்து, வெல்ல பாகை சிறிது சிறிதாக சேர்த்து, உருண்டைகள் பிடிக்கவும். சுவையான, சத்தான பொரி உருண்டை தயார்.