திருநெல்வேலி அல்வா
என்னென்ன தேவை?
கோதுமை - ¼ கிலோ, சர்க்கரை - 1 கிலோ, உருக்கிய நெய் - ¼ கிலோ, எண்ணெய் - ¼ கிலோ. கலர் பொடி - சிறிதளவு.
எப்படி செய்யணும்?
கோதுமையை நல்லா எட்டு மணி நேரம் ஊற வைங்க, ஊறிய கோதுமையை ஆட்டி பால் எடுத்துக்குங்க. ஒரு பால் போதும், கடா யில கோதுமைப் பாலை ஊத்தி, கலர் பொடி சேர்த்துக் கிண்டிக்கிட்டே இருங்க. கொஞ்சம் கெட்டிப்பட ஆரம்பிக்கிற சமயத்தில சர்க்கரையைப் போடுங்க. ஒண்ணாக்கின எண்ணெயையும், நெய்யையும், கொஞ்சம் கொஞ்சமா அப்பப்போ சேர்த்துக்கிட்டேவாங்க. அல்வா கடாயில ஒட்டா வரும்போது, நெய் தடவிய தட்டுல கொட்டிப் பரத்துங்க.
தஞ்சை சுருள் போளி
என்னென்ன தேவை?
மைதா மாவு - 1 ஆழாக்கு, தண்ணீர் - ½ ஆழாக்கு. வெண்ணெய் - 20 கிராம், தேங்காய்ப்பூ - 2 கைப்பிடி. சர்க்கரை - 2 கைப்பிடி, உப்பு - சிறிதளவு. எண்ணெய் - பொரிக்க.
எப்படி செய்யணும்?
மைதா மாவு, வெண்ணெய், உப்பு, தண்ணீர் எல்லாத்தையும் சேர்த்து பூரி மாவுபோல பிசையுங்க. அத பூரியா பரத்தி, எண்ணெயில பொரிச்செடுங்க. தேங்காயையும், சர்க்கரையையும் ஒண்ணாக்குங்க. பூரிங்க சூடா இருக்கும்போதே அந்தக் கலவைய பூரி மேல தூவி விடுங்க. பூரிங்கள சுருட்டி வைங்க. அவ்வளவுதான். திருப்பியும் கடாயில போட வேணாம்.
- மாலதி சந்திரசேகரன்