ஊர் பேசும் பட்சணங்கள்! கொஞ்சம் ஹெல்த்தி! செம்ம்ம டேஸ்ட்டி!

காரைக்குடி உப்பு சீடை
காரைக்குடி உப்பு சீடை

காரைக்குடி உப்பு சீடை

என்னென்ன தேவை?

அரிசி மாவு- 1 ஆழாக்கு, வறுத்து பொடித்த உளுத்தம் மாவு - ½  ஆழாக்கு, வெண்ணெய் - 50 கிராம், வறுத்து பொடித்த எள் - 1 ஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - பொரிக்க.

எப்படி செய்யணும்?

அரிசி மாவு, உளுத்தம் மாவு, வெண்ணெய், எள்ளு, உப்பு எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்துப் பிசையுங்க. பிசையறதுக்கு பாலோ, தண்ணியோ சேர்த்துக்கலாம். இந்த மாவ உருண்டைகளாக உருட்டிக்கோங்க. உருண்டைங்கள பேப்பர் இல்லாட்டி துணில நல்லா ஆறப்போடுங்க. ஆறின பிறகு எண்ணெயில் பொரிச்சு எடுங்க. பொரிக்கும்போது சீடையில ஈரப்பசை இருந்தா சீடை வெடிக்கும். இத முக்கியமா கவனம் வச்சுக்குங்க.

நாகர்கோயில் முந்திரிக்கொத்து

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு, மைதா மாவு - தலா 1 ஆழாக்கு, அரிசி மாவு - ½ ஆழாக்கு, வெல்லம் 400 கிராம், வறுத்த முந்திரி - 50 கிராம், ஏலத்தூள் - 1 ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க.

நாகர்கோயில் முந்திரிக்கொத்து
நாகர்கோயில் முந்திரிக்கொத்துtamil.asianetnews.com

எப்படி செய்யணும்?

பாசிப்பருப்ப வறுத்து, பொடிச்சுக்குங்க. அப்புறம் நல்லா வேக வச்சுக்குங்க. வெல்லத்த காய்ச்சி ரெண்டு கம்பி பத பாகாக்குங்க. வெந்த பாசிப்பருப்ப பாகுல போட்டுக் கிண்டிக்கிட்டே இருங்க. கெட்டிப் பட்டவுடனே ஏலத்தூள். ஒடிச்ச முந்திரி எல்லாத்தையும் போட்டு மிக்ஸ் பண்ணுங்க.

இதையும் படியுங்கள்:
வெள்ளரிக்காய் சப்பாத்தி செய்யலாம் வாங்க! 
காரைக்குடி உப்பு சீடை

அத சின்னச் சின்ன உருண்டைங்களாக உருட்டிக்கோங்க. மைதா மாவு, அரிசி மாவு ரெண்டையும் தண்ணி சேர்த்துக் கரைச்சுக்குங்க. அதுல உருண்டைங்கள முக்கி எண்ணெயில பொரிச்சு எடுங்க. இத கல்யாணத்துக்கு சீரா வைப்பாங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com