ஊர் பேசும் பட்சணங்கள்! கொஞ்சம் ஹெல்த்தி! செம்ம்ம டேஸ்ட்டி!

கோயமுத்தூர் கச்சாயம்
கோயமுத்தூர் கச்சாயம்
Published on

கோயமுத்தூர் கச்சாயம்

என்னென்ன தேவை?

மைதா - 1 ஆழாக்கு, நெய்யில் வறுத்த ரவை - ½ ஆழாக்கு, சர்க்கரை - ¾ ஆழாக்கு, தேங்காய் அல்லது கொப்பரை - 1 கை, ஏலப்பொடி - 1 ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க,

எப்படி செய்யணும்?

ப்போ என்ன பண்றோம்னா, எவ்வளவு சர்க்கரையோ அவ்வளவு தண்ணி எடுத்துக்கிறோம். அத நல்லா சூடு செய்றோம். அதுல மைதா, ரவையைக் கொட்டிக் கிண்டுறோம். தேங்காய நெய்யில் வறுத்து கொட்டுறோம். ஏலப்பொடிய போடறோம். நல்லா சேர்ந்து கெட்டியாகும். அத உருட்டி எண்ணெயில போட்டுப் பொரிச்சு எடுக்கிறோம். சக்கரை பிடிக்காதவங்க நாட்டுச் சக்கரை இல்லாட்டி கருப்பட்டி போட்டுக்கலாம்.

விருதுநகர் ஓமப்பொடி

என்னென்ன தேவை?

டலை மாவு - 1 ஆழாக்கு, அரிசி மாவு - ½  கைப்பிடி. ஓமம் - 1 ஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - பொரிக்க.

விருதுநகர் ஓமப்பொடி
விருதுநகர் ஓமப்பொடி

எப்படி செய்யணும்?

டலை மாவு, அரிசி மாவு, வெண்ணெய், சுத்தம் செய்த ஓமம், உப்பு எல்லாத்தையும் ஒண்ணா போட்டுப் பிசைங்க. ஓமப்பொடி அச்சு இருக்கில்ல, அதுல மாவ போட்டு பிழிஞ்சு. ஓமப்பொடியா பொரிச்சு எடுங்க ஈஸியான வேலை.

கோயமுத்தூர் ராகி வடை

என்னென்ன தேவை?

ராகி மாவு - 1 ஆழாக்கு, சின்ன வெங்காயம் - 1 கை, பச்சைமிளகாய் - 2, வெண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - பொரிக்க.

கோயமுத்தூர் ராகி வடை
கோயமுத்தூர் ராகி வடை

எப்படி செய்யணும்?

ராகி மாவு, பொடியா நறுக்கின வெங்காயம், மிளகாய், வெண்ணெய், உப்பு எல்லாத்தையும் ஒண்ணாக்கி தேவைன்னா தண்ணி சேர்த்து நல்லா பிசைஞ்சுக்கோங்க, மாவை வடையா தட்டி எண்ணெயில் பொரிச்சு எடுங்க. அவ்வளவுதான். சுடச்சுட சாப்பிட வேண்டியதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com