"அடுப்பங்கரையில் ஆரோக்கிய ஜாலம்: காய்கறிகளின் சுவையான சங்கமம்!"

healthy cooking tips
A delicious confluence of vegetables
Published on

சர்க்கரைவள்ளி கிழங்கு கட்லெட்

தேவை: 

சர்க்கரைவள்ளி கிழங்கு - கால் கிலோ 

 கடலை மாவு, அரிசி மாவு - தலா அரை கப் 

 வெங்காயம், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - தலா1 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி, மசிக்கவும். அதனுடன் கடலை மாவு அரிசி மாவு வெங்காயம், பச்சை மிளகாய் உப்பு கலந்து கெட்டியாகப் பிசைந்து, வடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் தடவி, டோஸ்ட் செய்யவும். மாலை நேரத்திற்கு ஏற்ற, சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கட்லெட் ரெடி.

பரங்கிக்காய் பருப்பு இல்லா கூட்டு

தேவை:

பரங்கிக்காய் - 2 கீற்று 

புளிக்கரைசல் - 1 கப்

மிளகு, சீரகம்,

தேங்காய் துருவல், உளுந்தம் பருப்பு - தலா 1 ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பரங்கிக்காயை தோல் நீக்கி நறுக்கி. புளிக்கரைசலில் சிறிது நீர் விட்டு பரங்கிக்காயை வேக வைக்கவும். அதில் உப்பு,  வெல்லத்தூள் சேர்க்கவும். மிளகு, சீரகம், உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவலை வறுத்து அரைக்கவும். அரைத்த விழுதை புளிக்கரைசலில் சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கி வைக்கவும். இந்தக் கூட்டு, இட்லி, தோசை, உப்புமா, வெண் பொங்கல் ஆகியவற்றுக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். 

இதையும் படியுங்கள்:
தொண்டை வலிக்கு மாத்திரை தேடாதீங்க... 5 நிமிஷத்துல ரிலீஃப் தரும் பாட்டி வைத்தியம்!
healthy cooking tips

கேரட் சாலட்

தேவை: 

கேரட் துருவல் - 2 டீஸ்பூன், 

இஞ்சி துருவல் - அரை ஸ்பூன், 

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன், 

செய்முறை: 

எலுமிச்சை சாறில் கேரட் துருவல், இஞ்சித் துருவல் உப்பு சேர்க்கவும். ஒரு ஸ்பூன் நெய்யில் கடுகு தாளித்து அதில் சேர்க்கவும். 

இது இட்லி, தோசை, உப்புமா ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.

பீட்ரூட் துவையல் 

தேவை: 

பீட்ரூட் துருவல் - 1 கப் 

வர்ற மிளகாய் - 5 

புளி - கோலி குண்டு அளவு 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப 

தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே செய்யலாம் உடுப்பி ஸ்பெஷல் மற்றும் ஹெல்தி சாட்!
healthy cooking tips

செய்முறை: 

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும், வர மிளகாய், புளி, பீட்ரூட் துருவல் போட்டு வதக்கவும். அதை கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து, துவையலில் சேர்க்கவும். இந்தத் துவையல் இனிப்பு, உப்பு, காரம், கலந்து வித்தியாசமான சுவையுடன் இருக்கும். எல்லா டிபனுக்கும் தொட்டுக்கொள்ள உகந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com