வெஜிடபிள் ஆம்லெட் சாப்பிட்டு இருக்கீங்களா…?

Veg Omlet
Veg Omlet

து சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ். செய்வது ரொம்ப சிம்பிள்.

கடலை மாவு ஒரு கப் 

அரிசி மாவு 2 ஸ்பூன்

கேரட் துருவல் 2 ஸ்பூன்

வெங்காயம் 1

தக்காளி 1 

இஞ்சி துருவல் ஒரு ஸ்பூன் 

பச்சை மிளகாய் 2 

கருவேப்பிலை சிறிது 

கொத்தமல்லி சிறிது 

உப்பு 

மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

கரம் மசாலா 1 ஸ்பூன்

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு ஒரு கப் ,அரிசி மாவு 2 ஸ்பூன், கேரட் , இஞ்சி துருவல், கருவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கியது சிறிது ,மஞ்சள் தூள் , கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து கல் சூடானதும் வார்க்க வெஜ் ஆம்லெட் சுட சுட தயார்.

மிளகு வெற்றிலை தோசை!

ரொம்ப ஹெல்தியான, ருசியான, செய்வதற்கு மிகவும் எளிதான தோசை இது. விசேஷங்கள் வந்தால் வீட்டில் நிறைய வெற்றிலை மீந்து விடும். அவற்றை வாடவிடாமல் பிரஷ்ஷாக இருக்கும் போதே தோசை செய்து சாப்பிட உடலுக்கு மிகவும் நல்லது.

மிளகு வெற்றிலை தோசை
மிளகு வெற்றிலை தோசைminnambalam.com

வெற்றிலை அஜீரணத்தை போக்கும். சளியை நீக்கும். மலச்சிக்கலை தீர்க்கும் தன்மை கொண்டது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. சிறந்த மூலிகையான வெற்றிலையுடன் மிளகும் சேர்த்து தோசை செய்ய ஆரோக்கியம் பிளஸ் ருசி இரண்டும் கிடைக்கும்.

மிளகு வெற்றிலை தோசை செய்முறை:

பச்சரிசி ஒரு கப் 

தேங்காய் துருவல் இரண்டு ஸ்பூன் மிளகு ஒரு ஸ்பூன் 

வெத்தலை 5 அ 6 

உப்பு தேவையான அளவு 

வெள்ளை எள்  2 ஸ்பூன் 

புளி சின்ன நெல்லிக்காய் அளவு.

இந்த தோசை வார்க்க நீண்ட நேரம் புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜஸ்ட் 2, 3 ஹவர்ஸ் கழித்து தோசை வார்க்க தயாராகிவிடும்.

இதையும் படியுங்கள்:
இந்த காபியின் விலை 1 லட்ச ரூபாய்: ஏன் தெரியுமா?
Veg Omlet

பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து உப்பு, மிளகு ஒரு ஸ்பூன், வெத்தலையை நடுக்காம்பை நீக்கி விட்டு சேர்க்கவும். தேங்காய் துருவல் இரண்டு ஸ்பூன், தேவையான உப்பு, புளி சிறிது எல்லாவற்றையும்  ஒன்றாக சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும். கோதுமை தோசை, ரவா தோசை பதத்திற்கு மாவை கரைத்து வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து தோசை வார்க்க பட்டு பட்டாக வருவதுடன் வாசனையும், ருசியும் கூடுதலாக இருக்கும். தோசை கல்லில் மாவை விட்டதும் மேலாக வெள்ளை எள்ளை ஒவ்வொரு தோசைக்கும் பரவலாக தூவி நன்கு வெந்ததும் திருப்பி போட்டு பொன் கலரில் எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com