அசத்தல் ருசிக்கு அட்டகாசமான டிப்ஸ் இதோ..!

samayal tips
samayal tipsImage credit - pixabay
Published on

புடவைகளுக்கு அழகு சேர்ப்பது அதன் பாடர்தான். அதேபோல் சமையல் செய்யும்போது சின்னச் சின்ன டிப்ஸ்தான் சமையலையே ருசிகரமாக்குகிறது. அதை தெரிந்து வைத்துக் கொண்டால் சமைப்பதற்கு நீண்ட நேரம் பிடிக்காது .சட்டென்று சமையலை முடித்துவிட்டு வெளியில் வந்து விடலாம். அதற்கான டிப்ஸ் இதோ:

* இனிப்புகள் செய்த பின் மீதமாகும் சர்க்கரைப்பாகில் இஞ்சியை அரைத்து பாகில் கலந்து கிளறி சாப்பிட வயிறு இதமாகும் .இது ஒரு ரெடிமேட் இஞ்சி மொறப்பாவாக பணிபுரியும். 

* பொரி உருண்டை மற்றும் வேர்க்கடலை உருண்டை செய்யும்போது வெல்லப்பாகில் சிறிது இஞ்சிச்சாறு சேர்த்துக் கொண்டால் சுவை பிரமாதமாக இருக்கும். 

* ஜவ்வரிசி பாயாசம் செய்வதற்கு முன் ஜவ்வரிசியை லேசாக வறுத்து அதில் வெந்நீரை ஊற்றி அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு பாயசம் செய்தால் சீக்கிரம் வந்துவிடும். 

* முளைகட்டிய பச்சைப் பயிறு முளைத்த வெந்தயம் ஆகியவற்றுடன் ஊற வைத்த புழுங்கல் அரிசி சேர்த்து அரைத்து தோசை வார்த்தால் சூப்பர் டேஸ்ட்டுடன் உடலுக்கு ஆரோக்கியமான தோசை கிடைக்கும். 

* தண்ணீர் நன்றாக கொதி வந்தவுடன் காய்கறிகளைப் போட்டால் சீக்கிரமே வெந்துவிடும். 

* முட்டைக்கோஸ் பொரியல் செய்யும் பொழுது வேகவைத்த பச்சை பட்டாணியை சேர்த்தால் ருசி அசத்தும். 

* திணை பொங்கல் செய்யும் பொழுது ஒரு கைப்பிடி வேர்க்கடலையை வறுத்து சேர்த்து பொங்கல் செய்தால் ருஸி அட்டகாசமாக இருக்கும். 

* முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ், கருவேப்பிலை, தனியா, பச்சை மிளகாய் இவைகளை பொடியாக நறுக்கி ஜவ்வரிசி மாவில் சேர்த்து வடை செய்தால் ருசி அட்டகாசமாக இருக்கும்.

* கடலைப்பருப்பில் வடை செய்யும்போது சோம்பு ,வர மிளகாயை அதனுடன் சேர்த்து அரைத்து பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், கேரட், மல்லித்தழை, கருவேப்பிலை இவைகளை சேர்த்து வடை தட்டினால் ருசியில் அசத்தும். சாப்பிடுபவர்கள் அதிகம் கேட்பார்கள். 

* கருணைக்கிழங்கை வேகவைத்து துண்டுகளாக்கி அதனுடன் வெண்ணெய், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு காரம் சேர்த்து நன்றாக பிசறி வறுத்தெடுத்தால் நன்றாக ருசிக்கும். நாக்கையும் அரிக்காது. 

* வெறும் துவரம் பருப்பு மாத்திரம் சேர்த்து செய்யும் சாம்பாருக்கு மசாலாக்களை வறுத்து இடித்து செய்தால் சாம்பாரின் வாசமும் ருசியும் பிரமாதமாய் இருக்கும். 

இதையும் படியுங்கள்:
அவசரம் வேண்டவே வேண்டாமே!
samayal tips

* அதிகமானோருக்கு சாம்பார் வைக்கும்பொழுது துவரம் பருப்புடன் பயத்தம்பருப்பையும் சேர்த்து செய்ய சாம்பார் கெட்டியாயிருக்கும். சிறிதளவு மசாலாக்களை வறுத்து அரைத்து சேர்த்தால் ருசி அசத்தலாக இருக்கும். 

* கீரை காய்கறிகளை பொடியாக நறுக்கி இட்லி, தோசை, சப்பாத்தி, அடை, புட்டு மாவுகளுடன் கலந்து செய்தால் ருசியும் அதிகரிக்கும். கலர்ஃபுல்லாக இருக்கும். சத்தும் கிடைக்கும். நொறுக்குத் தீனி சாப்பிட வேண்டும் என்றும் தோன்றாது. 

* கோதுமையை வறுத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். புழு பூச்சிகள் வராது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com