அவசரம் வேண்டவே வேண்டாமே!

Hurry
No Hurry
Published on

'பொறுத்தார் பூமி ஆள்வார்' 'பொறுமை கடலினும் பெரிது' என்றெல்லாம் மக்கள் பேசுவதை கேட்கிறோம். பொறுமையில் சிறந்த தருமரை மகாபாரதம் போற்றிப் பேசுகிறது. அவசரப்படுவதே ஒருவகை நரம்புத் தளர்ச்சி நோயின் அறிகுறி என்று இன்றைய மருத்துவர் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

அவசரப்பட்டு ஒரு காரியம் செய்து அதன் விளைவு விபரீதமாகி விடும்போது "அவ்வளவு அவசரம் ஏன்? பொறுமையாக செய்திருக்கலாம் அல்லவா? என்று பெரியவர்கள் குறைப்படுவதை காண்கிறோம்.

பெரியவர்கள் நமக்காக ஒன்றை செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, அதில் தாமதம் ஏற்பட்டால் சிறியவர்களால் பொறுமையுடன் இருக்க முடியாது. மாறாக பெரியவர்கள் மீது கோபம் ஆத்திரமும்தான் உண்டாகும் .

ஆனால் அவசரத்தால் விளைந்த பாதிப்புகளை அனுபவித்தவர்களுக்கு தான் பொறுமையின் அருமை தெரியும் .சரித்திரம் நமக்கு கற்றுத்தந்த பாடம் கூட இதுதான்.

ஜெர்மனியின் அதிபர் ஹிட்லர் தன் நாட்டை ஆட்சி செய்தவரை ஜெர்மனியர்களுக்கு அவர் கடவுளாகவே தெரிந்தார். ஆனால் அந்த ஹிட்லருக்கு ஐரோப்பா முழுவதையும் வசப்படுத்தி விடவேண்டும் என்ற பேராசை பிடித்தது. அதை விரைவில் அடைந்து விடவேண்டும் என்றும் திட்டமிட்டார். அவசரப்பட்டார். தொடக்கத்தில் சிறு சிறு வெற்றிகள் கிடைத்தன. அத்தோடு அவர் அமைதியுற்று இருக்கலாம். திருப்தி அடைந்திருக்கலாம். ஆனால் அவர் அவசரப்பட்டு ரஷ்யாவின் மீது படையெடுத்தார். கடும் குளிர்பருவத்தில் சென்று மாட்டிக்கொண்டார்.

அதன் விளைவு நிறைய நஷ்டத்துடன் பெருத்த சிரமத்துடன் பின் வாங்க நேர்ந்தது. இதுவே அவருக்கு போரில் பெரும் தோல்வியை ஏற்படுத்தி அவர் எதிரிகளிடம் சிக்கிக் கொள்ளும் தருவாயில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவசரப்பட்டு செய்யும் காரியத்தில் உணர்ச்சி வேகம் இருக்குமே தவிர, அறிவுத்திறனுக்கு அங்கே வேலை இருக்காது. திட்டமிடலும் நிதானமும் இல்லாத செயல் தோல்வியைத்தான் தரும். காரணம் அதில் தவறுகள் நேரும் வாய்ப்புகள் அதிகம். பொருள் விரயம் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
மற்றவர்களுக்காக வாழாமல் உங்களுக்காக வாழுங்கள்...!
Hurry

பொறுமையாக செயல்படும் காலத்தில் திட்டமிட்டு வேலையை அமைத்துக் கொள்ள முடியும். நல்ல பொருட்களை உரிய காலத்தில் வாங்கி சேமிக்கவும் முடியும்  வேலையை தொடங்கும்போது திறமையைத் தேடிப் பெற்று நல்ல முறையில் முடித்துக் கொள்கிறோம். வேலையின்போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டாலும், அது சிறிய தவறாகத்தான் இருக்கும். அதன் பாதிப்பும் அதிகம் இருக்காது. தவறை திருத்திக் கொள்ளவும் முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com