
உருளைக்கிழங்கு சேப்பங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை வேகவைத்து தோலுரித்து உப்பு மசாலா பொடி ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் வீட்டில் உள்ள பேக்கிங் ஓவன் ட்ரேயில் சிறிது எண்ணையை தடவி இந்த கிழங்குகளை பரப்பி வைத்து அரை மணிநேரம் பேக் செய்தால் நல்ல கரகரப்பான ரோஸ்ட் தயார்.
வேர்க்கடலையை ஓரளவிற்கு பொடி செய்து வெண்டைக்காய் வதக்கும் போது கடைசியில் இந்த பொடியை சிறிது தூவினால் சுவை சூப்பராக இருக்கும்.
பச்சைப்பட்டாணியை உரித்து பிளாஸ்டிக் கவரில் போட்டு வாயை நன்கு கட்டி குளிர்சாதன பெட்டியில் ஃப்ரீசரில் வைத்திருந்தார் எத்தனை நாட்கள் ஆனாலும் பசுமையாக இருக்கும்.
வத்த குழம்பு செய்யும்பொழுது கடைசியில் மஞ்சள் பொடி மற்றும் மிளகு பொடியை கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
தேங்காய் சாதம் எலுமிச்சை சாதம் போன்ற சாதங்களை தயாரிக்கும்போது பொட்டுக்கடலையை நன்கு வறுத்து போட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
பயத்தம் பருப்பு எப்போது வேகவைக்கும் போதும் குழைந்துவிடும். அதை தடுக்க வேகவைக்கும் எந்த பருப்பானாலும் நன்கு கழுவி பின்னர் குக்கர் பாத்திரத்தில் பருப்பை சிறிது உப்பை போட்டு வைத்து விட்டால் போதும் பருப்பு கழுவிய நீரிலேயே வெந்துவிடும் குழைந்து போகாமல்.
தோசை மொறு மொறுவென இருக்க சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து மாவுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.
முதல் நாளே பட்டாணி கொண்டைக்கடலை போன்றவைகளை ஊற வைக்க மறந்துவிட்டால் ஒரு பிளாஸ்க்கில் வெந்நீ நிரப்பி அதில் பட்டாணி அல்லது கொண்டைக்கடலை போட்டு ஒரு மணிநேரம் ஊற வைத்தாலே டக்கு என்று ஊறிவிடும்.
பாகற்காய் கறி வதக்கும்போது சிறிதளவு மாங்காய் இப்படியும் சேர்த்து செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் கசப்பே தெரியாது.
காபி கலக்கும்போது பாலை கொதிக்க வைத்து நுரை வரும் அளவிற்கு நன்கு ஆற்றி பின்னர் டிகாஷன் சேர்க்க வேண்டும் இவ்வாறு செய்தால் எவ்வளவு பழைய டிகாஷனாக இருந்தாலும் காபி பிரஷ்ஷாக இருக்கும் எக்காரணத்தை கொண்டும் டிகாஷனை சூடு படுத்த கூடாது.
பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு கப் கோதுமை மாவிற்கு ஒரு தேக்கரண்டி ரவை என்ற விகிதத்தில் கலந்து பிசைந்தால் பூரி பந்து போல நன்கு உப்பி வரும்.
வெங்காய பஜ்ஜி செய்யும்போது வெங்காயத்தை சிறிதளவு வதக்கி விட்டு பின்னர் பஜ்ஜி செய்தால் வெங்காயம் வட்ட வட்டமாக பிரிந்து வராது.
ஒரு கப் துவரம் பருப்பு அரை கப் கடலைப்பருப்பு கால் கப் பயத்தம் பருப்பு என்ற விகிதத்தில் கலந்து பருப்பு பொடி அல்லது பருப்பு துவையல் செய்தால் ஒரு புதுவித சுவையுடன் இருக்கும்.
சிறிது உளுத்தம் பருப்பை ஊறவைத்து கோதுமை மாவுடன் கலந்து தோசை பார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
மிளகு, மிளகாய், துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்து புளித்த மோருடன் கலந்து கருவேப்பிலை கடுகு தாளித்துக் கொட்டி கொதிக்கவைத்தால் புதுவித மோர் குழம்பு தயார்.