
முட்டைக்கோஸ் பஜ்ஜி
தேவை:
முட்டைக்கோஸ் - 16 இலைகள்
நறுக்கிய வெங்காயம் - 1
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் கலந்து, கொஞ்சமாக நீர் விட்டு பிசையவும். முட்டைக்கோஸ் இலைகளை நீளவாக்கில் நறுக்கவும். அவற்றை மாவில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சூப்பர் சுவையில் முட்டைக் கோஸ் பஜ்ஜி தயார்.
வெண்டைக்காய் பஜ்ஜி
தேவை:
வெண்டைக்காய் - 12
கடலை மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு மாவு - தலா 3 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 3
சீரகம் - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
உளுந்தம் பருப்பு, மிளகாய், சீரகம் மூன்றையும் சிறிது நீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு இவற்றுடன் அரைத்த விழுது, உப்பு கலந்து நீர் விட்டு, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வெண்டைக்காயின் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, நீளவாக்கில் இரண்டாகக் கீறி, மாவில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு, பொரித்து எடுத்தால், சுவையான, மணமான, மொறு மொறு வெண்டைக்காய் பஜ்ஜி தயார்.
காலிஃப்ளவர் பஜ்ஜி
தேவை:
காலிஃப்ளவர் - 1
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
காலிஃப்ளவரை சுத்தம் செய்து, நறுக்கி, வேக வைக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை நீர் விட்டு, கெட்டியாக கரைக்கவும். வெந்த காலிஃப்ளவர் துண்டுகளை மாவில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையும், சத்தும் நிறைந்த காலிஃப்ளவர் பஜ்ஜி தயார்.
சர்க்கரைவள்ளி கழங்கு பஜ்ஜி
தேவை:
சர்க்கரை வள்ளி கிழங்கு - 6
கடலை மாவு – 1 கப்,
அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய் த்தூள் – 1 ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சர்க்கரைவள்ளிக்கிழங்கை கழுவி, தோல் நீக்கி, வட்ட வட்டமாக நிறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு இவற்றை நீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு வில்லைகளை
இந்த மாவில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும். இந்த பஜ்ஜி இனிப்பு, காரம் கலந்த வித்தியாசமான சுவையில் சூப்பராக இருக்கும்.