வெயிலுக்கு இதமான உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள் சில…

நுங்கு சர்பத்...
நுங்கு சர்பத்...

வெயிலுக்கு விதவிதமான பானங்கள் தயாரித்து பருக உடல் குளிர்ச்சி அடைவதுடன் புத்துணர்ச்சியும் பெறும். உடலுக்குத் தேவையான நீர் சத்தும் கிடைக்கும். சத்து நிறைந்த இந்த பானங்களை செய்வதும் எளிது.

நுங்கு சர்பத்:

இளம் நுங்கு 10 

நன்னாரி சர்பத் 1/4 கப்

ஊற வைத்த சப்ஜா விதைகள் 1 ஸ்பூன்

தேன் சிறிது 

ஐஸ் துண்டுகள் சிறிது

இளம் நுங்குகளின் தோலை நீக்கி சதைப் பற்றை அதனுள் இருக்கும் நீருடன் சேர்த்து எடுத்துக் கொள்ளவும். அதில் நன்னாரி சர்பத் விட்டு, ஒரு மணி நேரம் ஊறிய சப்ஜா விதைகள் ஐஸ் துண்டுகள் சேர்த்து சிறிதளவு தேன் கலந்து பருக வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான நாவின் சுவை மொட்டுக்களை ஈர்க்கக் கூடிய நுங்கு சர்பத் தயார்.

லஸ்ஸி ரெசிபிஸ்:

சிம்பிள் லஸ்ஸி:

கெட்டித் தயிர் ஒரு கப் 

சர்க்கரை 2 ஸ்பூன் 

ஏலப்பொடி அரை ஸ்பூன்

ஐஸ் துண்டுகள் சிறிது

அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அடிக்க மிகவும் ருசியான லஸ்ஸி தயார்.

கலர் ஃபுல் லஸ்ஸி:

கெட்டி தயிர் ஒரு கப் 

ரோஸ் சிரப் 1/4 கப்

சர்க்கரை 2 ஸ்பூன்

ஐஸ் துண்டுகள் சிறிது அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுத்து சுற்றி எடுக்க டேஸ்டியான லஸ்ஸி தயார்.

லஸ்ஸி ரெசிபிஸ்...
லஸ்ஸி ரெசிபிஸ்...

வாழைப்பழ லஸ்ஸி:

வாழைப்பழம் ஒன்று 

கெட்டி தயிர் ஒரு கப் 

சர்க்கரை 2 ஸ்பூன் 

ஏலப்பொடி அரை ஸ்பூன்

ஐஸ் துண்டுகள் சிறிது கனிந்த வாழைப்பழமாக எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கெட்டித் தயிர், சர்க்கரை, ஏல பொடி சேர்த்து மிக்ஸியில் அடித்தெடுக்க வாழைப்பழ லஸ்ஸி தயார்.

இதேபோல் ஆப்பிள்,கொய்யாப்பழம் ஆகியவற்றைக் கொண்டும் லஸ்ஸி தயாரிக்கலாம். சுவையாக இருக்கும். வெயிலுக்கு தாகம் தணிப்பதுடன் உடலுக்கும் நல்லது. மேலே சிறு துண்டுகளாக்கப்பட்ட பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற‌வற்றைக் கூட தூவி அலங்கரித்து கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
கண்டங்களின் பெயர்கள் எப்படி வந்தன?
நுங்கு சர்பத்...

கேசர் டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி:

குங்குமப்பூ ஐந்தாறு 

சர்க்கரை தேவையானது 

அதிகம் புளிப்பில்லாத கெட்டி தயிர் ஒரு கப் 

ஏலப்பொடி அரை ஸ்பூன்

முந்திரி பாதாம் 6

முதலில் சிறிதளவு தயிரில் குங்குமப்பூ சேர்த்து ஊற விடவும். பிறகு மிக்ஸி ஜாரில் தயிர், ஏலப்பொடி, குங்குமப்பூ கரைத்தது, 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்த பாதாம், முந்திரி அனைத்தையும் சேர்த்து இரண்டு துண்டு ஐஸ் கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் அடிக்க மிகவும் மணமான கேஸர் ட்ரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com