
கிராம்பு ஏலக்காய் பட்டை போன்றவைகளை ருசி மற்றும் மணத்துக்காக உணவில் அதிக அளவில் சேர்ப்போம். ஆனால் பெரும்பாலும் விரும்பும் அளவுக்கு அதன் ருசி அமைவதில்லை. ருசி நன்றாக அமைய என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கிராம்பு ஏலக்காய் பட்டை போன்றவைகளை இடிக்கும் போது அதோடு சிறிதளவு உப்பு சேர்த்து இடியுங்கள். பின்பு அதனை உணவுப் பொருட்களில் சேர்த்தால் விரும்பும் ருசியும் மனமும் கிடைக்கும்.
இனிப்பு உணவில் கிராம்பு ஏலக்காய் பட்டையை சேர்ப்பதாக இருந்தால் உப்புக்கு பதில் சிறிதளவு சர்க்கரை சேருங்கள். இவைகளை இடித்துப்போட்டால் முழு பலன் கிடையாது மணமும் குறைந்துவிடும் அதனால் முழுதாகவே போட்டு விடுங்கள் முழுதாக போடும்போது இடித்து போடுவதை விட குறைந்த அளவு சேர்த்தாலேபோதும்.
ஏலக்காயை உடைத்து விதையை மட்டும் எடுத்து சமையலுக்கு சேர்ப்பவர்கள் அதன் தோலை தூர வீசி விடவேண்டாம். டீ தயாரிக்கும்போது தோலினை சேருங்கள் அதிக சுவை கிடைக்கும்.
சமையலறை சிலாப்களை துடைக்க பயன்படுத்தும் தண்ணீரில் சிறிதளவு வினிகர் கலந்திடுங்கள் இந்த தண்ணீரை வைத்து துடைத்தாலும் எறும்பு தொல்லை நீங்கும்.
சர்க்கரை இருக்கும் பாத்திரத்தில் எறும்பு வந்தால் அந்த சர்க்கரை கூட ஒரு சில கிராம்புகளை போட்டு வையுங்கள் எறும்புகள் ஓடிவிடும் மீண்டும் எறும்பு தொல்லை ஏற்படவும் செய்யாது.
ஈ தொல்லை இருக்கும் இடத்தில் சிறிதளவு புதினா இலையை கரைத்து தண்ணீரில் கரைத்து தெளியுங்கள். புதினாவுக்கும் ஈக்களுக்கும் ஆகவே ஆகாது.
தேங்காயின் ஓரங்களை துருவிவிட்டு பிறகு உள்ளே துருவ வேண்டும் உள்ளே துருவி விட்டு ஓரங்களை துருவினால் துண்டு துண்டாக பெயர்ந்து விழும் துருவல் சரியாக இருக்காது.
வறுவல் கூட்டு ஆகியவற்றில் உப்பு காரம் அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரட் அல்லது ரஸ்கைப் பொடித்து தூவினால் சரியாகிவிடும்.
சாதம் குழைவாக ஆகிவிட்டால் சிறிதளவு நல்லெண்ணையை சேர்த்துவிடுங்கள் சாதங்கள் மேலும் குழையாது.
தேங்காய் போளி அல்லது கடலைப்பருப்பு போளி செய்யும்போது மாறுதலுக்கு இரண்டு கப் கேரட் துருவலுடன் தேவையான வெல்லம் ஏலப்பொடி கோவா சிறிது நெய் சேர்த்து பூரணம் செய்து போளி செய்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
இரண்டு வாழைப்பழத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் ஒன்றை டம்ளர் பால் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து ஏதாவது ஒரு பழ எசென்ஸை ஊற்றிக் காய்ச்சினால் புதிய வகை பாயாசம் தயார்.
ஜாடியில் தாளித்த ஊறுகாய் வைப்பதற்கு முன் சிறிது கல் உப்பு போட வேண்டும். பின் ஊறுகாயை கொட்டி வறுத்து பொடித்த கடுகு தூள் ஊறுகாயின் மேலே காய்ச்சாத நல்லெண்ணெய் ஊற்றினால் வாசமுடன் இருக்கும் சீக்கிரமும் கெட்டுப்போகாது.
வெண்டைக்காயை எண்ணெயில் வதக்கி உப்பு தூவி கிளறி பின் வெங்காயம் தக்காளி சேர்த்து சமைத்தால் சாம்பாரிலும் குழம்பிலும் வெண்டைக்காய் உடையாமல் ருசியோடு இருக்கும்.