ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ice cream
ice cream
Published on

ஐஸ்கிரீம் என்றால் யாருக்குதான் பிடிக்காது? இந்த இனிப்பு நம்மை குழந்தைகளாக மாற்றி, மனதை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு அற்புதமான உணவாகும். ஆனால், முதன்முதலில் இந்த ஐஸ்கிரீம் எப்படி உருவானது? இதன் பின்னணி என்ன என்பது பற்றி உங்களில் எத்தனைப் பேருக்கு தெரியும்? இந்தப் பதிவில் ஐஸ்கிரீமின் வரலாறு பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளப் போகிறோம். 

ஐஸ்கிரீம் துல்லியமாக எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் இல்லாவிட்டாலும், பண்டைய காலங்களில் பன் மற்றும் பழங்களைக் கலந்து உண்டதற்கான சான்றுகள் உள்ளன. ரோமானிய பேரரசர் நீரோ, மலைகளில் இருந்து பணியை எடுத்து வந்து, பழங்களுடன் கலந்து உண்டதாகக் கூறப்படுகிறது. பாரசீகர்கள் பால் மற்றும் சர்க்கரையைப் பயன்படுத்தி ஐஸ்கிரீம் போன்ற உணவை தயாரித்தனர். இதுவே, நவீன ஐஸ்கிரீமின் முன்னோடி எனக் கூறலாம். 

இடைக்காலத்தில் அரபு நாடுகளில் ஐஸ்கிரீம் தயாரிப்பு முறைகள் மேம்படுத்தப்பட்டன. ஐஸ் மற்றும் உப்பைப் பயன்படுத்தி பால், பழங்களை உறைய வைக்கும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பத்தாம் நூற்றாண்டில் பாக்தாத், டமாஸ்கஸ் மற்றும் கெய்ரா போன்ற நகரங்களில் ஐஸ்கிரீம் பிரபலமாக இருந்தது.‌ 13ம் நூற்றாண்டில் மார்க்கோபோலோ, சீனாவில் இருந்து ஐரோப்பாவுக்கு ஐஸ்கிரீம் தயாரிக்கும் முறைகளைக் கொண்டு வந்தார். இதன் பிறகு இத்தாலியில் ஐஸ்கிரீம் தயாரிப்பு ஒரு கலையாக மாறியது. 

16ம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபை ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஐஸ்கிரீம் உண்ணுவதைத் தடை செய்தது. இருப்பினும், இந்தக் கட்டுப்பாடு ஐஸ்கிரீமின் பிரபலத் தன்மையைக் குறைக்கவில்லை. 18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு ஐஸ்கிரீம் தயாரிக்கும் முறைகளைக் கொண்டு வந்தனர். அமெரிக்காவில் ஐஸ்கிரீம் விரைவாக பிரபலமடைந்து, 19 ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சியின் காரணமாக ஐஸ்கிரீம் தயாரிப்பு பெருமளவில் தொடங்கப்பட்டது. 

அதன் பிறகு 20ம் நூற்றாண்டில் குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது, ஐஸ்கிரீம் தொழிலுக்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்தது. இதன் மூலம் ஐஸ்கிரீமை வீட்டிலேயே தயாரிப்பது எளிதாகியது. மேலும், பல்வேறு சுவைகளில் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு, உலகெங்கிலும் விற்பனை செய்யப்பட்டது. இந்தியாவில் ஐஸ்கிரீம் பிரிட்டிஷ் ஆட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. இது செல்வந்தர்கள் மட்டுமே அருந்தும் உணவாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் அனைத்து தரப்பு மக்களாலும் உண்ணக்கூடிய உணவாக மாறியது. 

இதையும் படியுங்கள்:
ஐஸ்கிரீம் சாப்பிடும்போது எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?
ice cream

இப்போது ஐஸ்கிரீம் உலகெங்கிலும் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இதைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இது வெறும் இனிப்பு உணவு என்பதைத் தாண்டி, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் வரலாறுகளின் கலவை என்றுதான் சொல்ல வேண்டும். பண்டைய காலங்களில் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை ஐஸ்கிரீம் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இன்று, உலகெங்கிலும் பலவிதமான சுவைகளில் ஐஸ்கிரீம்கள் கிடைக்கின்றன. 

இதை வெறும் உணவு எனச் சொல்வதை விட, நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு அற்புதமான அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com