ஐஸ்கிரீம் சாப்பிடும்போது எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

ஐஸ்கிரீம் ...
ஐஸ்கிரீம் ...

அன்பு குழந்தைகளே!

அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும்தானே குட்டீஸ்? அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று சில வழிமுறைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

துருக்கி நாட்டில் பெண்கள் நாவால் ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது என்ற விதிமுறை இருப்பதாகக் கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு பெண்களுக்காக நடந்த பயிற்சி வகுப்பு ஒன்றில் ஐஸ்கிரீமை நாக்கால் நக்கி சாப்பிடக்கூடாது என்றும் உருகிய பிறகே சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். நாம் துருக்கியில் பிறக்காமல் தப்பித்தோம் என்று நினைத்துக் கொள்கிறீர்களா!!

கோன் வடிவ  ஐஸ்கிரீம்களை ருசிக்கும்போது அவசரப்பட்டு, அதன் அடிப்பாகத்தைக் கடித்து விடக்கூடாது. அப்படி செய்தால் ஐஸ்கிரீம் வேகமாக கீழே உருகி ஊற்ற ஆரம்பித்துவிடும். இது ஐஸ்கிரீம் சாப்பிடும் எண்ணத்தையே மாற்றிவிடும். எனவே, கூம்பு வடிவ ஐஸ்கிரீம்களைப் பொறுத்தவரை ஓரங்களில் முதலில் கடித்து சாப்பிடுங்கள் குழந்தைகளே!

ஒரு கிண்ணத்தில் நட்ஸ் பழ வகைகள் அல்லது கேக்குடன் ஐஸ்கிரீம் போன்ற பிற டாப்பிங்ஸுடன் பரிமாறப்பட்டால் அதனை ஸ்பூனுக்குப் பதிலாக ஃபோர்க் எனப்படும் முட்கரண்டி கொண்டு சாப்பிடவேண்டும்.

ஐஸ்கிரீம் கலந்த பலூடாவை சாப்பிட நீண்ட ஸ்பூன்களைப் பயன்படுத்தலாம். ஏனெனில் ஃபலூடாவில் பழங்கள் நட்ஸ் சியா விதைகள் ஜெல்லி போன்றவை அடுக்கடுக்காக போடப்பட்டிருக்கும். அவற்றை நன்றாக கலந்து சாப்பிட நீளமான ஸ்பூன் மட்டுமே சரியான தீர்வாக இருக்கும்.

ஐஸ் பாப் அல்லது பாப்சிகல் சாப்பிடும்போது அவை வேகமாக உருகி உடைகளைக் கறையாக்கும். இதிலிருந்து தப்பிக்க ஐஸ்கிரீமைபோல் மெதுவாக சுவைக்காமல் பாப்சிகல்லை கையில் வாங்கிய மறுகணமே வேகமாக சாப்பிட்டு விட வேண்டும். அதையும் மீறி ஆடைகளில் கறைபடுவதைத் தடுக்க டிஷ்யூபேப்பர் கைவசம் இருக்கட்டும் ஓ.கே.வா?

ஐஸ்கிரீம் ...
ஐஸ்கிரீம் ...

ஐஸ்கிரீம்  சாப்பிடக் கொடுக்கும் ஸ்பூனைப் பாருங்கள் எவ்வளவு சிறியது. இதற்கும் ஒரு காரணம் உண்டு. அந்தச் சிறிய ஸ்பூனில் கொள்ளும் அளவிற்கு கொஞ்சமாக எடுத்து நாக்கின் மீது வைத்து அது உருகி நீராகும் வரையில் வாயிலேயே வைத்திருந்து ரசித்து, ருசித்து விழுங்கவேண்டும். தொண்டை தாங்கிக்கொள்ளும் அளவுக்கு ஐஸ்கிரீம் வெதுவெதுப்பாக உள்ளே போவதாக இருந்தால் நமது தொண்டையை அது பாதிக்காது.

துளி துளியாக ஐஸ்கிரீமை சாப்பிடும்போதுதான் அதன் சுவையை நாம் அனுபவித்து சாப்பிடமுடியும்.

இதையும் படியுங்கள்:
பலவித நோய்களுக்கு மருந்தாக ஆவாரம் பூ சூப்!
ஐஸ்கிரீம் ...

ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தொண்டை கட்டிக்கொள்ளுமே என்று பயப்படுபவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் வெதுவெதுப்பாக ஒரு தம்ளர் வெந்நீரைக் குடிக்கலாம்.

முக்கியமான குறிப்பு: அடிக்கிற வெயிலில் வெளியில் அலைந்துவிட்டு உடனே ஐஸ்கிரீம் சாப்பிடாதீர்கள் செல்லங்களா? சிறிது நேரம் அறை வெப்ப நிலைக்கு தக்கவகையில் நமது உடல் இயல்பு நிலைக்கு வந்தபிறகு ஐஸ்கிரீம் சாப்பிடலாம். சரிதானே?!

உங்கள் மீது அக்கறை வைத்திருக்கும்
ஆர். ஜெயலட்சுமி பாட்டி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com