Noodles உணவில் வரலாறு என்ன தெரியுமா? 

history of Noodles food
History of Noodles food!
Published on

உலகின் பல பகுதிகளில் பிரபலமான உணவாக விளங்கும் நூடுல்ஸ், நீங்கள் நினைப்பது போல ஒரு சாதாரண உணவு அல்ல. அதன் பின்னால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு, பல்வேறு கலாச்சாரங்கள், தொழில்நுட்ப வளர்ச்சியின் கதை புதைந்துள்ளது. 

நூடுல்ஸின் தோற்றம் சீனாவில்தான் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே, சீனா அதன் தாயகமாகக் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் நூடுல்ஸ் பயன்பாட்டில் இருந்ததற்கான தொல்பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன. அக்காலத்தில் தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ், பின்னர், கோதுமை மாவு மற்றும் பிற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் வகையில் முன்னேற்றம் அடைந்தது. 

சீனாவில் தோன்றிய நூடுல்ஸ் பிற நாடுகளுக்கும் பரவி, ஒவ்வொரு பகுதிகளும் தனித்துவமான வடிவங்கள் சுவைகளில் மாற்றி அமைக்கப்பட்டது.  

  • சீனாவில் நூடுல்ஸ் மிகவும் பிரபலமான உணவு. இங்க பல்வேறு வகையான நூடுல்ஸ் தயாரிக்கப்படுகின்றன. 

  • ரோமன் என்ற பெயரில் ஜப்பானில் நூடுல்ஸ் மிகவும் இது பொதுவாக சூடான சூப்பில் பரிமாறப்படும். 

  • கொரியாவில் ராமியன் என்ற பெயரில் நூலில் உண்ணப்படுகிறது. இது கோதுமை மாவு மற்றும் ஓக் மரக்கொட்டை மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது. 

  • வியட்னாமில் பான் சீ என்ற பெயரில் நூடுல்சை சமைத்து உண்கின்றனர்.‌ இது அரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது. 

  • மேலும் சில நாடுகள் முட்டை, பருப்பு மாவு போன்றவற்றை சேர்த்தும் நூடுல்ஸ் தயாரித்து சாப்பிடுகின்றனர். 

20ஆம் நூற்றாண்டில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பிரபலமடைந்ததால், அது உலகளாவிய அளவில் பரவியது.‌ விரைவாகவும், எளிதாகவும் தயாரிக்கக்கூடிய உடனடி நூடுல்ஸ், பசியைத் தணிக்கவும், பல்வேறு சுவைகளை அனுபவிக்கும் விரும்பும் மக்களிடையே பெரும் வரவேற்ப்பைப் பெற்றது. இன்று உலகின் பல பகுதிகளில் நூடுல்ஸ் பிரதான உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இதையும் படியுங்கள்:
வெள்ளி பாத்திரங்களை உணவு அருந்தப் பயன்படுத்துவதன் ரகசியம் தெரியுமா?
history of Noodles food

நூடுல்ஸ் வெறும் உணவு மட்டுமல்ல, பல சமூகக் கலாச்சாரங்கள் இணைந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. சீனர்களின் நீண்ட ஆயுளுக்கு இதுவே காரணமாக சொல்லப்படுகிறது. ஜப்பானில் நட்பின் அடையாளமாகவும் நூடுல்சை கருத்துகின்றனர். பல நாடுகளில் குடும்ப விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகளில் நூடுல்ஸ் பரிமாறப்படுகிறது. 

தொடக்கத்தில் ஒரு சிறிய கைவினைப் பொருளாக தொடங்கிய நூடுல்ஸ், இன்று உலகம் முழுவதும் பிரபலமான உணவுகளில் ஒன்றாக மாறியுள்ளது. நூடுல்ஸின் பல்வேறு வகைகள், அதன் பின்னணியில் உள்ள கலாச்சாரங்கள் போன்றவற்றை மேலும் ஆராய்வது, உணவு பற்றிய நமது புரிதலை மேலும் விரிவுபடுத்தும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com