90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பால் ஐஸ்... ஈஸியாக வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்!

home made icecream
home made icecream

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

90 காலக்கட்டங்களில் பல உணவுகள் பேமஸாக இருந்தது. அதற்கு இன்றும் ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய காலம் போல் சென்ற இடமெல்லாம் ஐஸ்க்ரீம் அன்றைய காலக்கட்டத்தில் கிடைக்கவில்லை. ஒரு நபர் வீடு வீடாக சென்று ஐஸ் விற்பார். அந்த ஐஸ் வண்டிக்காக ஏராளமான குழந்தைகள் காத்து கொண்டிருந்தது அதிகம். அப்படி வரும் ஐஸ்களில் மிகவும் பேமஸான ஐஸ்தான் பால் ஐஸ்.

பால் உடலுக்குத் தேவையான புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளிட்ட 13 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் ஒரு முழுமையான உணவாகும். இது வலுவான எலும்புகள் மற்றும் பற்கள், தசை வளர்ச்சி, சிறந்த இதய ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

தினமும் பால் அருந்துவது உடலுக்கு உடனடி ஆற்றலை அளித்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது. பாலில் உள்ள அதிகப்படியான கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி எலும்பு அடர்த்தியை அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புப்புரை) அபாயத்தைக் குறைக்கிறது. அதே போல பாலில் உயர்தர புரதம் (Casein and Whey) இருப்பதால், இது தசை நார்களைப் புதுப்பிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

இப்படி இருக்கும் பாலில் நன்றாக டேஸ்டியான கெட்டியான ஐஸ் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம். இதில் கெமிக்கல் எதுவும் கலக்கப் படாததால் நீங்கள் தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கோடை காலம் வேற வந்துவிட்டது. இது குழந்தைகளுக்கு பிடித்த ஐட்டமாகவும், நல்ல உணவாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பால் - அரை லிட்டர்

வென்னிலா எசன்ஸ் - கால் ஸ்பூன்

கார்ன் ப்ளவர் - 2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாலை நன்றாக காய்ச்சிவிட வேண்டும். பிறகு அதில் கார்ன் ப்ளவர் மாவை போட்டு கட்டி இல்லாமல் கரைத்து கொள்ள வேண்டும். பிறகு அதில், வென்னிலா எசன்ஸ் கால் ஸ்பூன் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். கெட்டி பதம் வந்த பிறகு ஆற வைத்துவிட வேண்டும். பால் ஆறிய பிறகு உங்களுக்கு பிடித்த ஐஸ் மோல்டில் ஊற்றி பிரிட்ஜில் வைத்துவிட வேண்டும். சுமார்5 மணி நேரம் கழித்து எடுத்து பார்த்தால் அது நன்றாக பிரீஸ் ஆகியிருக்கும். பிறகு சாப்பிட்டால், அவ்வளவுதான் டேஸ்டும் அட்டகாசமாக இருக்கும், கோடை வெயிலுக்கு தொண்டையும், மனசும் குளிர்ந்துவிடும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!

logo
Kalki Online
kalkionline.com