வீட்டிலேயே செய்யலாம் வெயிலுக்கு இதமான பாதாம் ஃபிர்னி!

ஃபிர்னி ...
ஃபிர்னி ...Image credit - youtube.com

பிரபலமான ஃபிர்னி கெட்டியான நம்ம ஊரு பாயாசம் போன்றது. ஆனால் சற்று காஸ்ட்லியானது. பாஸ்மதி அரிசி, பால், பருப்புகள், சர்க்கரை மற்றும் ஏலக்காய்தூள், குங்குமப்பூ மற்றும் ரோஸ் வாட்டரால் வாசனையுடன் தயாரிக்கப்படும் ஒரு உன்னதமான  இனிப்பு கிரீமி  புட்டு ஆகும் இது.

இது வட இந்தியாவில் பண்டிகை சந்தர்ப்பங்களில் அல்லது தீபாவளி போன்ற சிறப்பு கொண்டாட்டங்கள் மற்றும் கர்வா சௌத் திருவிழாவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ரம்ஜான் நெருங்கி வரும் வேளையில் பலரும் இந்த ஃபிர்னியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று நினைப்பார்கள். முக்கியமாக இந்த வெயில் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்து நிறைந்த குளிர் உணவாகும் இதன் செய்முறை இதோ…

தேவை:
தரமான பாஸ்மதி அரிசி - கால் கப்
கெட்டிப்பால் - 1 லிட்டர்
ஏலக்காய்
குங்குமப்பூ
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் - 7 அல்லது 8
பாதாம் ,பிஸ்தா, முந்திரி- தலா 8
ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன்

செய்முறை:
அரிசியைக் கழுவி அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை நீரில் ஊறவைத்து தண்ணீரை முழுமையாக வடித்து ஒரு மெல்லிய காட்டன் துணியில் உலர வைத்து மிக்சியிலிட்டு ரவை பதத்தில் நன்கு அரைத்து எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரம் அல்லது கடாயில் 1 லிட்டர் முழு பாலையும் கொதிக்க ஆரம்பிக்கும் வரை சூடாக்கவும். பால் சூடாகும்போது, ​​ஒரு சிறிய கிண்ணத்தில் 1 தேக்கரண்டி வெதுவெதுப்பான பாலை எடுத்து, அதில் குங்குமப்பூ இழைகளை கலக்கவும். (குங்குமப்பூ மணம் அதிகம் வேண்டும் என்றால் இன்னும் கூடுதலாக்கலாம்?)
பால் கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்த அரிசியைச் சேர்த்து நன்றாக. கிளறவும். அடுத்து சர்க்கரை சேர்த்து மீண்டும் கிளறவும். குறைந்த தீயில் வைத்து பாலுடன் அரிசியும் இணைந்து கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறவும். இதிலேயே தேவையான சர்க்கரையையும் சேர்க்கவும்.

அரிசி வெந்து மணம் வந்ததும் தூளாக்கி ஏலக்காய், நீரில் ஊற வைத்து சிறிதாக நறுக்கிய பாதாம் பிஸ்தா முந்திரி ஆகியவற்றை சேர்த்து மேலும் கிளறவும். பாலில் ஊறவைத்த குங்குமப்பூவை கைகளால் நசுக்கி சேர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
காலத்தை துள்ளியமாகக் காட்டும் அதிசயக் கல் எங்குள்ளது தெரியுமா?
ஃபிர்னி ...

இப்போது பாலும் அரிசியும் இணைந்து கெட்டியான அடுக்குகளாக உருவாகும். இதை சரியான பதத்தில் இறக்கி ரோஸ் வாட்டர் விட்டுக் கலக்கி ஆறியதும் சிறிய மண் கலயங்களில் இட்டு மேலே அலுமினியக் காகிதம் கொண்டு மூடி பிரிட்ஜில் வைத்துக் குளிர்வித்து பரிமாறவும்.

சிறிய மண் பானைகள் ஃபிர்னியின் கூடுதல் ஈரப்பதம் மற்றும் திரவங்களை உறிஞ்சி மேலும் கெட்டியாக மாற்றி சுவையை மெருகூட்டும்.

குறிப்பு - ஃபிர்னி ரெடியாகி பரிமாறும் போது கூட மேலே பருப்புகளைத் தூவலாம். சர்க்கரை சேர்ப்பது அவரவர் விருப்பம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com