காலத்தை துள்ளியமாகக் காட்டும் அதிசயக் கல் எங்குள்ளது தெரியுமா?

மார்க்கபந்தேஸ்வரர் கோவில்
மார்க்கபந்தேஸ்வரர் கோவில்

மிழகத்தின் கோவில்களில் இருக்கும் அதிசயங்கள் எத்தனை காலங்கள் ஆனாலும் அழியாமல் நிலைத்திருக்க கூடியது. அப்படி ஒரு கோவிலில் இருக்கும் காலத்தை காட்டும் கல் 1300 வருடங்களுக்கு பிறகும் துல்லியமாக நேரத்தை கணிப்பது அதிசயமாக உள்ளது. பண்டைய தமிழர்களின் அறிவுத்திறனையும், கலைத்திறனையும் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.

விரிஞ்சிபுரம் கோவில், தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. விரிஞ்சிபுரம் கோவிலை மார்க்கபந்தேஸ்வரர் கோவில் என்றும் அழைப்பார்கள். இக்கோவில் அதன் சிற்பக்கலைக்கு பெயர் போனதாகும்.

இக்கோவிலை சோழர்கள் 13 ஆம் நூற்றாண்டில் கட்டினார்கள் பின்பு பொம்ம நாயக்கர்கள் இக்கோவிலை விரிவுப்படுத்தினார்கள். இங்கே உள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கமாகும்.  இங்குள்ள சிவபெருமானை மார்க்க பந்தேஸ்வரர் என்றும் தாயாரை மரகதாம்பாள் என்றும் அழைப்பார்கள். இந்த சுயம்பு லிங்கமானது வடகிழக்கு பக்கம் சாய்ந்த வண்ணம் இருக்கும். இங்கே உள்ள சிம்மக்குளத்தில் பக்தர்களுக்கு குளிக்க அனுமதியுண்டு.

இக்கோவிலில் உள்ள பெரிய சிவலிங்கம் ஒன்றில் 1008 லிங்கங்கள் வடிக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பாகும். இந்த கோவில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் போனது. இக்கோவிலில் மூன்று பைரவர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கபந்தேஸ்வரர் கோவில்
மார்க்கபந்தேஸ்வரர் கோவில்

இங்கே கௌரி தேவி, பிரம்மா, விஷ்ணு ஆகியோரை பக்தர்கள் வழிப்படுகின்றனர். ஆதி சங்கரர் இங்குள்ள சிம்மத்தீர்த்தத்திற்கு பீஜாக்ஷர பிரதிக்ஷ்டை செய்தார். அருணாச்சல புராணம், சிவரகசியம், காஞ்சிபுராணம் ஆகியவற்றில் இக்கோவிலை பற்றி சொல்லப்பட்டுள்ளது.

இங்குள்ள சிம்மத்தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராடிய பிறகு சிவபெருமானை வேண்டுவோருக்கு நல்ல பலன் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டுவோருக்கும் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையுண்டு. அதுமட்டுமில்லாமல் சூலி தீர்த்தம், சோம தீர்த்தம் ஆகிய இரண்டு தீர்த்த குளங்களும் இங்குள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
உடல் வலு பெறவும், எடை குறையவும் உதவும் ஸ்கிப்பிங்!
மார்க்கபந்தேஸ்வரர் கோவில்

இக்கோவிலில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு அதிசயம்தான், காலம் காட்டும் கல். இந்த காலம் காட்டும் கல்லின் மீது ஒரு குச்சியை வைத்தால் அதன் நிழல் சரியான நேரத்தின் மீது விழும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி துல்லியமாக நேரத்தை கணிக்கும் இந்த கல்லை எப்படி 1300 வருடங்களுக்கு முன்பே கண்டுப்பிடித்தனர் என்பது வியப்பாகவே உள்ளது. இத்தகைய அதிசயம் நிறைந்த கோவிலை வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வருவது சிறந்ததாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com