சுடச்சுட சாதமும், நெய் மணக்கும் பருப்பு பொடியும்! நாவூறும் ரகசிய ரெசிபி இதோ!

homemade-paruppu-podi-recipe
homemade-paruppu-podi-recipe
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

- ஆ. நர்மதா

பருப்பு பொடி

உணவு என்பது பசியை ஆற்றக்கூடியது. சுவையான உணவு மனிதனின் உணர்வுகளோடு கலந்ததுள்ளது. நாம் சாப்பிடகூடிய உணவு மிகுந்த சுவையில் இருந்தால்தான் அளவிற்கு அதிகமாகவே அனைவரும் சாப்பிடுவார்கள். நம்மில் பெரும்பாலானோர் உணவு பிரியர்கள் ஆகவே இருப்போம். அன்றாட உண்ணும் இட்லி, தோசை, பிரியாணி, சாதம், சப்பாத்தி இது போல்தான் நம் உணவு பழக்க வழக்கம் இருக்கின்றது.

இட்லி, தோசைக்கு மட்டும்தான் பொடி வைத்து சாப்பிட்டி இருப்போம். குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு மாற்றக இந்த பருப்பு பொடி வைத்து சாப்பிடுவது சுவையாக இருக்கும். சாதத்துக்கு எப்படி பொடி செய்வது என்று இப்போது பார்க்கலாம். இது நெய், நல்லெண்ணெய் உடன் பருப்பு பொடி வைத்து சாப்பிடும்போது சுவை அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - 5 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 5 தேக்கரண்டி

பாசிப்பருப்பு. - 5 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 5 தேக்கரண்டி

மிளகு - 2 தேக்கரண்டி

சீரகம் - 2 தேக்கரண்டி

கறிவேப்பில்லை - சிறிதளவு

உப்பு - தேவையானஅளவு

வத்தல் - ஆறு

பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:

வாணலியில் கடலைப்பருப்பை நன்கு மணம் வரும் வரை வறுத்துக் வைத்துகொள்ளவும். அதேபோல் உளுந்தம்பருப்பு, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு அனைத்தையும் தனித்தனியாக சிவந்து மணம் வரும் வரை நன்கு வறுக்கவும்.

பின் மறுபடியும் வாணலியில் சீரகம், மிளகு, வத்தல், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து வைத்துக்கொள்ளவும். நன்கு ஆறியவுடன் அனைத்தையும் மீக்சியில் சேர்த்து உப்பு,பொருங்காயத் தூள் உடன் சேர்த்து நன்கு மாவுபோல அரைத்து எடுத்துகொள்ளவும். இப்போது கமகமக்கும் பருப்பு பொடி தயார். இதனை சூடான சாதத்தில் பருப்பு பொடிஉடன், நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இந்தப் பருப்பு பொடி சுவை மாறாத ஒன்று இதனுடன் உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம் சேர்த்து பரிமாறினால் சுவை நன்றாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மாலை நேரத்து மயக்கம்: மொறுமொறு பக்கோடா முதல் நாவூறும் ரஸ்க் அல்வா வரை!
homemade-paruppu-podi-recipe

இந்த பருப்பு பொடியை நாம் ஸ்டோர் பண்ணி வைத்தும் சாப்பிடலாம். இந்த பருப்பு பொடி ரெசிபி ஒரு பேச்சுலர் ரெசிபியும். கண்டிப்பா இந்த ரெசிபி மிகுந்த சுவையானதாக இருக்கும் அனைவரும் ட்ரை பண்ணி பாருங்க. வெளியில் கோயில், பயணம் செல்லும்போது இதனை உடன் எடுத்து செல்லலாம். இதில் பருப்பு வகைகள், மிளகு, சீரகம், கறிவேப்பில்லை சேர்த்து இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் தேவையான பூரோட்டின் கிடைக்கும் உடலுக்கும் நல்லது.

ரவை பாயசம்

நாம் அன்றாட வாழ்வில் விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு ஜவ்வரிசி மற்றும் சேமியா சேர்த்து தான் பாயாசம் செய்வோம். இன்று அதற்கு மாற்றாக ரவை வைத்து பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

ரவை - 3 தேக்கரண்டி

பால் ஆம் - 1 லிட்டர்

சர்க்கரை - 300 கிராம்

முந்திரி உலர் திராட்சை ஏலக்காய் - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
உடல் எடையைக் குறைக்கணுமா? நுங்கு சாப்பிடுங்க! பலரும் அறியாத நன்மைகள்!
homemade-paruppu-podi-recipe

செய்முறை :

வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி உலர் திராட்சை சேர்த்து வறுத்துகொள்ள வேண்டும். பின் அதை தனியாக எடுத்துவைக்கவும். அதே வாணலியில் ரவை சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும் நிறம் மாறக்கூடாது. பின் அதனுடன் பால் சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும். ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை ஏலக்காய் வறுத்து வைத்திருந்த முந்திரி உலர் திராட்சை நெய் சேர்த்து நன்கு கிளறவேண்டும். மணமணக்கும் ரவை பாயாசம் ரெடி.

logo
Kalki Online
kalkionline.com