மாலை நேரத்து மயக்கம்: மொறுமொறு பக்கோடா முதல் நாவூறும் ரஸ்க் அல்வா வரை!

tea-time-snacks
tea-time-snacks
Updated on

புதினா மல்லி பக்கோடா

தேவை:

கடலை மாவு - ஒரு கப்

அரிசி மாவு - கால் கப்

பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்

சிறிய வெங்காயம் - 20

பச்சைமிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

புதினா இலை - 25 கிராம்

கொத்தமல்லித்தழை - 50 கிராம்

வெண்ணெய் - 25 கிராம்

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானவற்றிலுள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக பிசைந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்துப் பரிமாறவும். சுவையான, சத்தான புதினா மல்லி பக்கோடா ரெடி.

ரஸ்க் அல்வா

தேவை:

ரஸ்க் - 4

நெய் - அரை கப்

சர்க்கரை - ஒரு கப்

முந்திரி - 4

நீர் - 200 மில்லி லிட்டர்

செய்முறை:

ரஸ்கை மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். நீரில் 1 கப் சர்க்கரை சேர்த்து நன்கு கரையும் வரை நன்கு காய்ச்சி, பின் வடிகட்டி மீண்டும் காய்ச்சவும். இப்போது ரஸ்க் தூளை அதில் சேர்த்து நன்கு கிளறவும்.

4 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கரண்டியை சுற்றி, அல்வா பதம் வரும் வரை அடிபிடிக்காமல் கிண்டவும். இப்போது சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும். வித்தியாசமான சுவையில் ரஸ்க் அல்வா ரெடி.

இதையும் படியுங்கள்:
கொங்கு ஸ்பெஷல்: நாவூறும் 'அரிசி பருப்பு சாதம்' செய்வது எப்படி?
tea-time-snacks

வாழைக்காய் வடை

வாழைக்காய் – 1 கப் (துருவியது / நறுக்கியது)

கடலை பருப்பு – 1 கப்

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – 1 சிறு துண்டு

சீரகம் – 1 தேக்கரண்டி

சோம்பு – ½ தேக்கரண்டி

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:

வாழைக்காயை தோல் சீவி துருவி, உப்பு கலந்த நீரில் 5 நிமிடம் ஊற வைத்து நன்றாக பிழிந்து நீர் நீக்கவும்.

கடலை பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடிக்கவும். பருப்பை கொரகொரப்பாக அரைக்கவும்.

அதில் வாழைக்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலக்கவும்.

சிறு வடை வடிவில் செய்து மிதமான தீயில் எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும். சுவையான வாழைக்காய் வடை ரெடி.

சேமியா கட்லெட்

தேவை:

சேமியா - கால் கிலோ

உருளைக்கிழங்கு - 100 கிராம்

கேரட் - 1 கப்

இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

உப்பு - தேவைக்கேற்ப

மல்லித் தழை - 1 கைப்பிடி

எண்ணெய் - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை -1 கொத்து

புதினா -1 கைப்பிடி

இதையும் படியுங்கள்:
"ஓட்ஸ் கஞ்சி குடிச்சு போர் அடிச்சிருச்சா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!
tea-time-snacks

செய்முறை:

சேமியாவை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுhpத்து மசித்துக்கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா, மல்லித் தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வேகவைத்த சேமியா, துருவிய கேரட், இஞ்சி விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா, உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.

அந்தக் கலவையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விருப்பமான வடிவில் தட்டி, சூடான எண்ணெயில்; போட்டு, இருபுறமும் முறுகலாக வெந்ததும் எடுத்து, சூடாக பரிமாறவும். சூப்பர் சுவையில் சேமியா கட்லெட் ரெடி.

இதனுடன் தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com