மழைக்கு சூடான ஜவ்வரிசி, முந்திரி, கடலைப்பருப்பு பக்கோடா வகைகள்!

பக்கோடா வகைகள்...
பக்கோடா வகைகள்...
Published on

வெளியில் இருந்து கடும் பசியுடன் வரும் பிள்ளைகள் கொறிப்பதற்கு சூடாக மொறு மொறுப்பாக ஏதேனும் வேண்டும் என்று விரும்புவார்கள். அன்றிலிருந்து இன்று வரை பக்கோடா வகைகள்தான் அனைவரின் சாய்ஸ். காரணம் செய்வதும் எளிது. ருசியும் அதிகம் என்பதே. அதில் சில வகைகளை இங்கே காண்போம்.

ஜவ்வரிசி பக்கோடா

தேவை:

ஜவ்வரிசி - ஒரு கப்
ரவை - ஒரு கப்
பச்சரிசி மாவு - ஒரு கப்
கெட்டித்தயிர்-  ரெண்டு கப்
கொத்தமல்லித் தழை  - சிறிது
பச்சைமிளகாய் - 10
வெங்காயம் - 2
முந்திரிப்பருப்பு - பத்து
இஞ்சி - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
புளிக்காத தயிரில் ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற விடவும். ரவையை சுத்தம் செய்து அரிசி மாவுடன் சேர்த்து ஊறிய ஜவ்வரிசியுடன் சேர்த்து நன்றாக பிசையவும். இதிலேயே பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான உப்பு  , கொத்தமல்லி தழை, உடைத்த முந்திரி பருப்பு போட்டு கெட்டியாக பிசைந்து காய்ந்த எண்ணெயில் பக்கோடா போல் உதிர்த்து போட்டு எடுத்தால் சூப்பரான ஜவ்வரிசி பக்கடா  முந்திரி பருப்புடன் சாப்பிடத்  தயார்.  இது செய்வதும் எளிது ருசியும் அதிகம்.

முந்திரி பருப்பு பக்கோடா

தேவை:

முந்திரிப்பருப்பு 100 கிராம்
கடலை மாவு - ஒரு கப்
டால்டா- ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையானது
இஞ்சி -சிறு துண்டு
பச்சை மிளகாய் - 4
சீரகம் - கால் தேக்கரண்டி
சோடா உப்பு - சிட்டிகை
பொரிப்பதற்கு - ரீபண்ட் ஆயில் கருவேப்பிலை கொத்தமல்லி தலை – சிறிது

செய்முறை:
ஒரு அகன்ற பாத்திரத்தில் டால்டாவுடன்   சோடா உப்பு, உப்பு, பொடியாக வெட்டிய இஞ்சி, பச்சை மிளகாய், பொடித்த சீரகத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கருவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்றாக நுரைக்கத் தேய்த்து இரண்டாக உடைத்த முந்திரி பருப்பையும் சேர்த்து சிறிது நேரம் கிளறி கடைசியில் சலித்த கடலை மாவையும் சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசிறி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவை உதிர்த்து போட்டு பொன்னிறமாக எடுத்து வைக்கவும். முந்திரிப்பருப்பை முழுதாக போடுவதும் பாதி பாதியாக வெட்டி போடுவதும் அவரவர் விருப்பம். முந்திரிப்பருப்பு காஸ்ட்லியான ஒரு பண்டம் என்பதால் தேவைக்கு செய்து பார்த்து ருசித்து மகிழலாம்.

இதையும் படியுங்கள்:
அளவான பணம் அவசியம் நம்மைக் காப்பாற்றும்!
பக்கோடா வகைகள்...

கடலைப்பருப்பு பக்கோடா

தேவை:

கடலைப்பருப்பு 200 ஒரு கப்
வெங்காயம் -2 
பச்சை மிளகாய்-  10
உப்பு - தேவையானது
எண்ணெய் - பொறிக்க
கருவேப்பிலை  சிறிது

செய்முறை:

கடலைப்பருப்பைக் கழுவி மூன்று மணி நேரம் நன்றாக ஊறவைத்து உப்பு சேர்த்து ஆட்டி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து பிசைந்து காய்ந்த எண்ணெயில்  விட்டு சிவந்ததும் எடுக்கலாம். இன்னும் கிரிஸ்பியாக வேண்டும் என்பவர்கள் விரும்பினால் ஒரு கை பச்சரிசியும் கடலை பருப்புடன் கலந்து ஊறவைத்து ஆட்டலாம். இதற்கு கரம் மசாலா அல்லது பட்டை கிராம்பு சோம்பு சேர்ப்பது அவரவர் விருப்பம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com