சூடான, சுவையான கட்லெட்: நொறுக்குத் தீனிக்கு சிறந்த சாய்ஸ்!

cutlet recipes
Hot, delicious cutlet
Published on

காய்கறிகளை நறுக்கி, மைதா மாவு சிறிது கரைத்த நீரில் தோய்த்து, ரஸ்க் பொடி அல்லது பிரட் தூளில் பிரட்டி, உருட்டி, தட்டி சிறிது நேரம் கழித்து பொரித்தால், கட்லெட் உடையாமல், தூள் உதிராமல் மொறுமொறுப்பாக இருக்கும்.

சேனைக்கிழங்கை துருவி ஆவியில் வேகவைத்து பொட்டுக்கடலை மாவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசைந்து உருட்டி, தட்டி, ரஸ்க் தூளில் புரட்டி, தோசை கல்லில் போட்டு எண்ணெய் விட்டு வேகவைத்தால் சுவையான சேனைக்கிழங்கு கட்லட் தயார்.

வெஜிடபிள் கட்லெட் செய்யும் போது சிறிதளவு தேங்காய் சேர்த்தால், சுவை கூடி மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

காய்கறிகளில் மட்டுமல்ல, கீரைகளிலும் கட்லட் செய்யலாம். சத்து நிறைய கிடைக்கும்.

கட்லெட்களை எண்ணெயில் பொரிப்பதை விட தோசைக கல்லில் போட்டு வேக வைப்பதே உடம்புக்கு நல்லது. எண்ணெய் செலவும் குறையும்.

பொடியாக நறுக்கிய கீரை, உருளைக்கிழங்கு துருவல், உப்பு, கரம் மசாலா, மிளகுத்தூள் சேர்த்து வதக்கி பிரட்டை உதிர்த்து போட்டு கலந்து கெட்டியாக பிசைந்து உருட்டி, தட்டி, தோசை கல்லில் போட்டு ரோஸ்ட் செய்தால் சுவையான சத்தான கட்லெட் தயார். செய்வதும் சுலபம்.

இதையும் படியுங்கள்:
ஃப்ரிட்ஜ் வாசனை நீங்க... உப்பு அதிகம் ஆனால் என்ன செய்வது?
cutlet recipes

ஏதேனும் ஒரு காயில் பொரியல் செய்து, பிரெட்டில் சிறிது நீர் தெளித்து கலந்து, பிசைந்து, படைகள் போல தட்டி, ரவையில் புரட்டி எடுத்து, தோசை கல்லில் போட்டு,  எண்ணெய் விட்டு டோஸ்ட் செய்தால் சுவையான, சத்தான கட்லெட் தயார்.

-எஸ். ராஜம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com