சூடான ஈவினிங் ஸ்னாக்ஸ் பிரட் பகோடா!

பிரட் பகோடா
பிரட் பகோடாwww.youtube.com

சில நேரங்களில் வீட்டில் எந்த பொருளும் இல்லாத சமயத்தில் விருந்தினர்கள் வந்துவிடுவார்கள். அப்போது சட்டென்று கைக்கு கிடைத்த பொருளை வைத்து செய்து கொடுப்பது போல ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியைதான் இப்போது பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:

பிரட் - 6.

பொடியாக நறுக்கிய வெங்காயம்-1

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-2

துருவிய உருளை கிழங்கு-1

இஞ்சி பூண்டு விழுது- ½ தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

எண்ணை- தேவையான அளவு.

கடலை மாவு- 1 கப்.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

மல்லி தூள்- 1.தேக்கரண்டி.

கரம் மசாலா-1/2 தேக்கரண்டி.

பிரட் பகோடா செய்முறை:

முதலில் பிரட்டை எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு நன்றாக தண்ணீரை அழுத்தி எடுத்து விட்டு ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய உருளை கிழங்கை போட்டு அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா ½ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி, மல்லி தூள் 1 தேக்கரண்டியை சேர்த்து அதில் கடலை மாவு 1 கப்பை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக பகோடா பதத்திற்கு பிசைத்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
புற்றுநோயை தடுக்கும் ஆரோக்கிய இயற்கை உணவுகள்!
பிரட் பகோடா

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை விட்டு அது நன்றாக கொதித்த பிறகு செய்து வைத்திருக்கும் பகோடா மாவை சிறிது சிறிதாக உருட்டி அதில் போடவும். நன்றாக பொன்னிறமாக வெந்த பிறகு எடுத்துவிடவும். இப்போது சூடான மற்றும் சுவையான பிரெட் பகோடா ரெடி.

இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அவசர காலத்தில் சீக்கிரமாக செய்து கொடுத்து விடலாம். டொமெட்டோ கெச்செப்புடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். மழைக்காலங்களில் சூடாக சாப்பிடுவதற்கு இந்த ஸ்நாக்ஸ் நன்றாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com