புற்றுநோயை தடுக்கும் ஆரோக்கிய இயற்கை உணவுகள்!

Healthy natural foods that prevent cancer!
Healthy natural foods that prevent cancer!https://www.nagercoilinfo.com

பூண்டு: பூண்டு சாப்பிடும்போது குடல் மற்றும் கணையம் போன்ற வயிற்றில் உண்டாகும் புற்று நோயை தடுக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இது புற்றுநோய் செல்களை அழிக்க உதவும். அதனால் தினமும் உணவில் பூண்டை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முட்டைக்கோஸ்: முட்டைக்கோஸில் வைட்டமின் சி, ஏ, இ ஆகியவையும் சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்களும் மிகுந்து காணப்படுகின்றன. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் முட்டைக்கோஸை உண்ணலாம். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கும் முட்டைக்கோஸ் நிவாரணம் தரும். இது கண்ணுக்கு மிகவும் நல்லது. புற்றுநோய் வராமல் காக்கும் காய்கறிகளில் இதுவும் ஒன்று.

காலிஃப்ளவர்: காலிஃப்ளவரில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இதனை சாப்பிடும்போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படும். ஒரு ஸ்பூன் காலிபிளவர் விழுது, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 50 மில்லி அளவுக்கு தினமும் புற்றுநோயாளிகள் எடுத்துக் கொள்ளும்போது புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும். காலிஃபிளவர், முட்டைக்கோஸ் ஆகிய இரண்டும் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாத காய்கறிகள் ஆகும்.

முருங்கைக் கீரை: கீரையில் நார்ச்சத்து, கால்சியம், பீட்டா கரோட்டின் வைட்டமின் சி போன்றவையும், தாது உப்புகளும் காணப்படுகின்றன. இதை சாப்பிட்டால் கண்கள் மற்றும் சருமம் பொலிவு பெறும். இதை உண்பதால் பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். மூல நோய் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். எலும்புகள் வலுவடையும்.

இஞ்சி: ஆயுர்வேதத்தின்படி இஞ்சி எடுத்துக்கொள்வது பல்வேறு நன்மைகளை தருகிறது. புற்று நோய் பாதித்தவர்கள் ஹீமோதெரபிக்கு முன்பு இஞ்சி உண்பதால் குமட்டல் உணர்வு ஏற்படாமல் மட்டுப்படும். இதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை. இஞ்சி பல உடல் நலக் கோளாறுகளுக்கு தீர்வு அளிக்கும்.

மஞ்சள் தூள்: மஞ்சள் தூளில் இருக்கும் பாலிபீனால் குர்க்குமின் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்தும். மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்வது கிருமி நாசினி போல செயல்படுகிறது. மஞ்சள் சரும நோய்களைப் போக்கும். காயங்களுக்கும் கட்டிகள் உடையவும் தேமலை நீக்கவும் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவார்கள்.

ஆரஞ்சு பழம்: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புசத்து மிகுந்து காணப்படுகிறது. அதுமட்டுமல்ல, வைட்டமின் சி, பி, பி2 ஆகியவையும் இருக்கின்றன. இதை உண்பதால் சிறுநீரகத் தொற்று குறையும். மூட்டு வலி, கால் வலி உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை உண்ணலாம். புற்று நோய்க்கு எதிராக செயல்பட உதவும். தூக்கம் இன்மையால் அவதிப்படுபவர்கள் ஆரஞ்சு பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

மாதுளை: மாதுளம் பழத்தில் நார்ச்சத்து, நீர்ச்சத்து மாவு சத்து ஆகியவை அதிகம் உள்ளன. இதை உண்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இது சிறந்த நச்சு நீக்கியாக செயல்படும். இதய நோயாளிகளுக்கு நல்ல பலனளிக்கும். மலச்சிக்கல் தொல்லையா? தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு பாருங்கள் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். சிறுநீரக நோயாளிகள் இதை தவிர்ப்பது நல்லது.

கீரை வகைகள்: புதிய பச்சை இலை காய்கறிகளில் ஃபோலியேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இந்த உணவு புற்றுநோய் உண்டாக்கும் விளைவுகளை எதிர்த்து போராடுகிறது. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள இவை எலும்பு மற்றும் தசை பிரச்னைகளை குணமாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
நீங்கள் 50 பிளஸா? இனிமையான செகண்ட் இன்னிங்ஸ் உங்களுக்குத்தான்!
Healthy natural foods that prevent cancer!

தக்காளி: தக்காளியில் உள்ள வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடெண்ட் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது. அது மட்டுமின்றி, தக்காளியில் உள்ள லைகோபைன் வாய் புற்று நோயை உண்டாக்கும் செல்களை அழிக்க வல்லது என்றும் ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கிரீன் டீ: புற்றுநோய், இதய நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வைக்கிறது கிரீன் டீ. இயற்கையின் கொடையான டீ யில் இருப்பது புத்துணர்ச்சி மட்டுமல்ல, ஏராளமான நன்மையும்தான். குறிப்பாக, கிரீன் டீயில் அதிக நன்மைகள் இருக்கிறது. புற்றுநோய் இதய நோய்கள் வராமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை தொடர்ந்து குடித்துவந்தால் கொழுப்பு கரைந்து ஸ்லிம் ஆகலாம். மேலும், சர்க்கரை நோய் வராமல் காக்கும். இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com