

தேவையான பொருட்கள்:
1. 8 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்த கொண்டைக்கடலை 2½ கப்
2.பேபி பசலை கீரை இலைகள் 150 கிராம்
3.நறுக்கிய பூண்டுப் பற்கள் 6
4.சீரக பவுடர் 1 டீஸ்பூன்
5.மல்லி விதை (தனியா) பவுடர் 1 டீஸ்பூன்
6.ஸ்வீட் பாப்ரிக்கா பவுடர் ¾ டீஸ்பூன்
7.சிவப்பு மிளகாய் ஃபிளேக்ஸ் ½ டீஸ்பூன்
8.மிளகுத் தூள் ½ டீஸ்பூன்
9.பெகொரினோ ரொமானோ(pecorino Romano)சீஸ் தேவையான அளவு
10. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் 4 டேபிள் ஸ்பூன்
11.பார்ஸ்லே (parsley) இலைகள் ½ கப்
12.நறுக்கிய பெரிய வெங்காயம் 1
13.வெஜிடபிள் ப்ரோத் (broth) 4 கப்
14. உப்பு தேவையான அளவு
15.லெமன் ஜூஸ் 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு அடிகனமான வாயகன்ற கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். பின் அதில் உப்பு சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் அதனுடன் சீரக பவுடர், தனியா தூள், பாப்ரிக்கா தூள், மிளகுத் தூள், சில்லி ஃபிளேக்ஸ் ஆகியவற்றை சேர்த்து
கலந்து முப்பது செகண்ட்ஸ் வைத்திருக்கவும். பின் கொண்டைக் கடலையை சேர்த்து மசாலா அதில் நன்கு ஒட்டும்படி கிளறி விடவும். ஒரு பொடட்டோ ஸ்மாஷர் வைத்து கொண்டைக் கடலையில் கால் பாகம் மசியுமாறு நசுக்கிவிடவும்.
பின் அதில் வெஜிடபிள் ப்ரோத் மற்றும் ஒரு டம்ளர் கொண்டைக் கடலை வேக வைத்த தண்ணீரும் சேர்த்து, தீயை அதிகமாக்கி கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் கொதித்த பின் தீயை மீடியமாக்கி, பாத்திரத்தை ஒரு மூடியால் பாதி மூடி முப்பது நிமிடம் வைத்திருக்கவும். பிறகு அதனுடன் பேபி பசலை இலைகள் மற்றும் பார்ஸ்லே இலைகளை நறுக்கி சேர்த்து வேகவிடவும். கீரை இலைகள் வெந்ததும் லெமன் ஜூஸ் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். பின் சூப்பை சூடாக பௌல்களில் நிரப்பவும்.
மேற் பரப்பில் சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து, சிறிது துருவிய பெகொரினோ ரொமானோ சீஸ் சேர்த்து பரிமாறவும்.
சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த மெடிடெரேனியன் சிக்பீ சூப் அருந்தி மகிழுங்க.
புரோகொலி பொரியல் ரெசிபி:
தேவையான பொருட்கள்;
1.புரோகொலி 2
2.பொடிசா நறுக்கிய வெங்காயம் ¼ கப்
3.சீரகம் ¼ டீஸ்பூன்
4.மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
5.பூண்டு பற்கள் 4
6.வறுத்த வேர்க்கடலை 2 டேபிள் ஸ்பூன்
7.சிவப்பு மிளகாய் வற்றல் 2
8.கறிவேப்பிலை 2 இணுக்கு
9.கொத்தமல்லி இலைகள் 30
10.தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
11.உப்பு தேவையான அளவு
செய்முறை:
புரோகொலியை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலை, பூண்டு பற்கள், மிளகாய் வற்றல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைத்தெடுக்கவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து, பிறகு புரோகொலி துண்டுகளையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும். நீர்ச்சத்து வற்றியதும், அரைத்த மசாலாவை சேர்த்து, அது புரோகொலி துண்டுகளில் நன்கு ஒட்டும்படி கலந்துவிடவும். பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். சூடான சாதத்துடன் சேர்த்து உண்ண ஆரோக்கியம் நிறைந்த புரோகொலி பொரியல் தயார்.