ஹோட்டல் டேஸ்டில் வெஜிடேபிள் நூடுல்ஸ் வித் பேபி கார்ன்!

Veg Noodles
Veg Noodlesbehindtalkies.com

விட்டாச்சு லீவ்… இனி வித விதமாக சமைத்துத் தர சொல்லிக் கேட்பார்கள் குழந்தைகள். குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஏதேனும் சமைத்துக் தர நினைப்பவர் களுக்கு ஏற்ற சாய்ஸ்  வெஜிடேபிள் நூடுல்ஸ் வித் பேபி கார்ன். இது நிச்சயம் குழந்தைகளுக்கு ஓர் ஆரோக்கியமான ரெசிபியாக மட்டுமின்றி அவர்கள் விரும்பும் ருசியிலும் இருக்கும். வெஜிடேபிள் நூடுல்ஸ் வித் பேபி கார்ன் செய்முறை இதோ:

தேவையானவை:
நூடுல்ஸ் – 2 பாக்கெட் ( மசாலா சேர்க்காத தனி நூடுல்ஸ்)
பேபி கார்ன் – 1 கப் அல்லது 1 பாக்கெட்
கேரட் மற்றும் முட்டைக்கோஸ் – 11/2 கப்
கலர் குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
பூண்டு – 4 பற்கள்
வெங்காயத்தாள் – கொஞ்சம்
வெள்ளை வினிகர் – 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1/2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 1 டே.ஸ்பூன்
சர்க்கரை – சிறிது
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – சிறிது

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.    (ஒன்றோடொன்று ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய்). தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் நூடுல்ஸைப் போட்டு வேகவைக்க வேண்டும். மிகவும் வேகமாக விடாமல் பதமாக வெந்ததும், அதனை  வடிகட்டியிலிட்டு அதிலுள்ள நீரை வடிகட்டி அப்படியே குளிர்ந்த நீர் விட்டு  அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதே போல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும், அதில் பேபி கார்ன் சேர்த்து சில நிமிடம் மூடி வைத்து வேக வைத்து  நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும். (தேவைப்பட்டால் துளி உப்பு சேர்க்கலாம்).

இதையும் படியுங்கள்:
உங்கள் கனவுகளை நனவாக்குவது எப்படி?
Veg Noodles

பின் அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான ஆலிவ் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், நறுக்கிய பூண்டு மற்றும்  நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும். பின் அதில் சற்று நீளமாக வெட்டிய குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அத்துடன் பேபி கார்ன் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கள் நன்கு (வெந்ததுபோல்) வதங்கியபின் அதில் வினிகர், சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்துக் கிளறி, மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட்டு  வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து மேலே சிறிது எண்ணெய் சேர்த்து
காய்கறிகளுடன் நூடுல்ஸ் நன்றாக கலக்குமா வரை நன்கு பிரட்டி விட்டு இறக்கினால்  வெஜிடேபிள் நூடுல்ஸ் வித் பேபி கார்ன் ரெடி

ஸ்பைசியாக இருக்கும் இது ஹோட்டலில் செய்தது போலவே இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com