அசத்தலான சுவையில் ஹோட்டல் டிபன் சாம்பார்!

டிபன் சாம்பார்...
டிபன் சாம்பார்...www.youtube.com

தேவையான பொருட்கள் :
வேக வைக்க :

பாசிபருப்பு - 150 கிராம்
துவரம் பருப்பு - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
முருங்கைக் காய் - 2
மஞ்சள் தூள் - 1/2 tsp

சமைக்க :
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
புளி - 50 கிராம்
தக்காளி - 4
கறிவேப்பிலை / கொத்தமல்லி - சிறிதளவு

தாளிக்க :
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 3
பெருங்காயம் - சிறிதளவு
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை: 
வேகவைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை குக்கரில் 5 கப் தண்ணீர் விட்டு ஐந்து விசில் வந்ததும் இறக்கிவிடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு  கறிவேப்பிலை பொறிந்ததும் தக்காளி சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கி குழைந்ததும் புளிக்கரைசலைச் சேர்த்துவிட்டு கிளறவும்.

இதையும் படியுங்கள்:
90ஸ் கிட்டின் தித்திக்கும் தேன்மிட்டாய் நினைவுகள்… வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!
டிபன் சாம்பார்...

1 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதித்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறவும். மஞ்சள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு நன்கு கொதிக்க விடவு‌ம்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து மல்லித்தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

இறுதியாக சாம்பார் பொடியையும் நெய்யையும் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான்.

அசத்தலான  ஹோட்டல் சுவையில் டிபன் சாம்பார் தயார்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com