டேஸ்டியான செட்டிநாடு கவுனி அரிசி ஸ்வீட் -சிறுபருப்பு அல்வா செய்யலாமா?

Chettinad Kavuni rice sweet-Siru paruppu Halwa
Chettinad Kavuni rice sweet-Siru paruppu HalwaImage Credits: YouTube
Published on

ன்றைக்கு ஆரோக்கியமான கவுனி அரிசி ஸ்வீட் மற்றும் டேஸ்டியான சிறுபருப்பு அல்வா ரெசிபியை வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

கவுனி அரிசி ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள்;

அரிசி-1கப்.

வெல்லம்-1கப்.

ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.

நெய்-1/4 கப்.

துருவிய தேங்காய்- தேவையான அளவு.

கவுனி அரிசி செய்முறை விளக்கம்;

முதலில் கவுனி அரிசி 1 கப் எடுத்துக் கொண்டு 3 முறை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும். இப்போது  ஒரு பாத்திரத்தில் நன்றாக அரிசி மூழ்கும்வரை தண்ணீர் விட்டு 2 மணி நேரம் அரிசியை ஊறவைத்துக்கொள்ளவும்.

இப்போது அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். அரிசி நன்றாக மிருதுவாக வெந்து வந்திருக்க வேண்டும். இப்போது அதில் வெல்லம் 1 கப் சேர்த்து நன்றாக கிண்டவும்.

பிறகு ஏலக்காய்த்தூள் 1 தேக்கரண்டி, நெய் ¼ கப் சேர்த்து நன்றாக பத்து நிமிடம் கிண்டவும். கடைசியாக, துருவிய தேங்காயை மேலே தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கவுனி அரிசி ஸ்வீட் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்கள்.

சிறுபருப்பு அல்வா செய்ய தேவையான பொருட்கள்.

சிறுபருப்பு-1 கப்.

சர்க்கரை-1 கப்.

குங்குமப்பூ-சிறிதளவு.

நெய்-1/2 கப்.

உப்பு-1 சிட்டிகை.

ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.

பாதாம், முந்திரி- தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
ருசியான கொண்டைக்கடலை அடை - கோவக்காய் சட்னி செய்யலாம் வாங்க!
Chettinad Kavuni rice sweet-Siru paruppu Halwa

சிறுபருப்பு அல்வா செய்முறை விளக்கம்;

முதலில் சிறுபருப்பு 1 கப் எடுத்து தண்ணீரில் ½ மணி நேரம் ஊற வைத்துவிடவும். இப்போது சிறுபருப்பை நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். சிறுபருப்பை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் 1 கப் சர்க்கரை ½ கப் தண்ணீர் விட்டு நன்றாக பாவு பதம் வரும் வரை கலந்துவிடவும். இப்போது சுடுதண்ணீரில் ஊறவைத்த குங்குமப்பூவை சிறிது சேர்த்து ஒரு கம்பி பதம் வரும்வரை விட்டு எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயில் ½ கப் நெய் விட்டு அரைத்து வைத்திருக்கும் சிறுபருப்பை சேர்த்து நன்றாக கிண்டவும். பருப்பு நன்றாக வெந்து வரும் போது, எடுத்து வைத்திருக்கும் பாகை இத்துடன் சேர்த்து கிண்டவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துவிட்டு நன்றாக கட்டியில்லாமல் கிண்டிவிடவும்.

நன்றாக வெந்து அல்வா தயார் ஆனதும் ஏலக்காய் பொடி1 தேக்கரண்டி சேர்த்து கிண்டி கடைசியாக நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, பாதாமை சேர்த்து கிண்டி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சிறுபருப்பு அல்வா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com