வேற லெவல் சுவையில் வெஜிடபிள் பாயா-கேரளா சம்மந்தி செய்யலாம் வாங்க!

Vegetable Paya-Kerala chammanthi
recipes
Veg Paaya
Published on

ன்றைக்கு சுவையான வெஜிடபிள் பாயா மற்றும் கேரளா சம்மந்தி ரெசிபிஸை வீட்டிலேயே டேஸ்டியா எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.

வெஜிடபிள் பாயா செய்ய தேவையான பொருட்கள்;

பேஸ்ட் அரைக்க,

தேங்காய்-3 கைப்பிடி.

முந்திரி-5.

கிராம்பு-1

பட்டை-1

ஏலக்காய்-1

சோம்பு-1/2 தேக்கரண்டி.

கொத்தமல்லி புதினா-சிறிதளவு.

பச்சை மிளகாய்-1

கசகசா-1 தேக்கரண்டி.

எண்ணெய்-1 கரண்டி.

கடுகு-1/2 தேக்கரண்டி.

மிளகு-1/2 தேக்கரண்டி.

சோம்பு-1/2 தேக்கரண்டி.

பிரிஞ்சி இலை-1

வெங்காயம்-1

தக்காளி-1

பட்டாணி-1 கப்.

கேரட்-1 கப்.

உருளை-1கப்.

காலி பிளவர்-1 கப்.

பச்சை மிளகாய்-3

இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை கொத்தமல்லி-சிறிதளவு

குழம்புத்தூள்-3 தேக்கரண்டி.

கல் உப்பு-தேவையானஅளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

வெஜிடபிள் பாயா செய்முறை விளக்கம்;

முதலில் மிக்ஸியில் 3 கைப்பிடி தேங்காய், 5 முந்திரி, கிராம்பு 1, பட்டை 1, ஏலக்காய் 1, சோம்பு ½ தேக்கரண்டி, கொத்தமல்லி புதினா சிறிதளவு, பச்சை மிளகாய் 1, கசகசா 1 தேக்கரண்டி சேர்த்து பேஸ்டாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது குக்கரில் 1 கரண்டி எண்ணெய், கடுகு ½ தேக்கரண்டி, மிளகு ½ தேக்கரண்டி, சோம்பு ½ தேக்கரண்டி, பிரிஞ்சி இலை 1 போட்டு தாளித்துவிட்டு சிறிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 3 சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து வதக்கி விட்டு பட்டாணி 1 கப், கேரட் 1 கப், உருளை 1 கப், காலிபிளவர் 1 கப் சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதெல்லாம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி 1 சேர்த்து வதக்கிவிட்டு 3 தேக்கரண்டி குழம்புத்தூள், தேவையான அளவு கல் உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்த பிறகு குக்கரை மூடி 2 விசில் விடவும்.

இப்போது திறந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பேஸ்டை சேர்த்து கிண்டிவிட்டு 2கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.இப்போது எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான வெஜிடபிள் பாயா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

கேரளா சம்மந்தி செய்ய தேவையான பொருட்கள்;

தேங்காய் எண்ணெய்-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-5

பூண்டு-5

சின்ன வெங்காயம்-5

இஞ்சி-1 துண்டு.

தேங்காய்-1 கைப்பிடி.

புளி-நெல்லிக்காய் அளவு.

உப்பு-1/2 தேக்கரண்டி.

கருவேப்பிலை கொத்தமல்லி-சிறிதளவு.

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் டேஸ்டில் நரிப்பயறு வடை- முறுக்கு குழம்பு ரெசிபிஸ்!
Vegetable Paya-Kerala chammanthi
recipes

கேரளா சம்மந்தி செய்முறை விளக்கம்;

முதலில் கடாயில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு வரமிளயாய் 5, பூண்டு 5, இஞ்சி 1 துண்டு, சின்ன வெங்காயம் 5 சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். தேங்காய் 1 கைப்பிடி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

இப்போது வதக்கியதை மிக்ஸியில் சேர்த்து அத்துடன் நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து, கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு, உப்பு ½ தேக்கரண்டி, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். இப்போது இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து விட்டு இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அல்டிமேட் சுவையாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com