உணவு பொருட்களின் காலாவதி தேதியை எவ்வாறு தீர்மானிக்கிறார்கள்?

Expiry Date
Expiry Date
Published on

இந்தியாவில், உணவுப் பொருட்களுக்கான காலாவதி தேதிகள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (FSSAI - Food Safety and Standards Authority of India) கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த பொருட்களுக்கான தேதிகள் உணவு வகை, பேக்கேஜிங், உற்பத்தி செயல்முறை மற்றும் சேமிப்பு நிலைமைகள் உட்பட பல காரணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ், ஒரு பொருளின் ஆயுளை மதிப்பிடுவதற்கு உற்பத்தியாளர்கள் பல சோதனைகளை நடத்துகின்றனர் அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

என்னென்ன சோதனைகள்?

1. நுண்ணுயிரியல் சோதனை (Microbiological Testing):

இந்த சோதனையில் பாக்டீரியா, ஈஸ்ட் (yeast) மற்றும் மோல்டு (mold) போன்ற நுண்ணுயிரிகளின் இருப்பு மற்றும் வளர்ச்சி சரி பார்க்கப்படுகிறது. இந்த சோதனையானது, தயாரித்த உணவுப் பொருள்கள் எவ்வளவு காலம் மாசுபடாமல் உட்கொள்வதற்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது.

2. ரசாயன சோதனை (Chemical Testing):

இரசாயன சோதனை, கொழுப்புகள், புரதங்கள்(proteins) மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் (carbohydrates) போன்ற இரசாயனங்கள் கலக்கப்படுவதால் தயாரிப்புகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுகிறது. காலப்போக்கில் பொருட்களில் நிகழும் தீங்கு விளைவிக்கும் விஷயங்களின் உருவாக்கம் அல்லது அத்தியாவசிய ஊட்டச்சத்து இழப்பு ஆகியவற்றைக் கண்டறிய இந்த சோதனை உதவுகிறது.

3. உணர்வு மதிப்பீடு (Sensory Evaluation):

உணர்திறன் சோதனைகள் தயாரிப்பின் சுவை, வாசனை, அமைப்பு மற்றும் தோற்றத்தை மதிப்பீடு செய்கின்றன. இந்த சோதனையில் பயிற்றுவிக்கப்பட்ட பேனல்கள் அல்லது விருப்பத்தின் பெயரில் வந்த நுகர்வோர் குழுக்கள் மூலம் தயாரிப்புகளை சோதனை செய்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் மசாலாக்கள் கெட்டுப் போகாமல் இருக்க எளிய டிப்ஸ்!
Expiry Date

4. பிஸிக்கல் பரிசோதனை (Physical Testing):

இந்த சோதனை உற்பத்தி பொருளின் பண்புகளான அமைப்பு, நிறம் மற்றும் நிலைத்தன்மை போன்ற மாற்றங்களை மதிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு பிஸ்கட் எவ்வளவு நாட்கள் மிருதுவாக (Crisp) இருக்கிறது போன்றவற்றை இந்தச் சோதனையில் சரி பார்ப்பார்கள்.

5. துரிதப்படுத்தப்பட்ட அடுக்கு வாழ்க்கை சோதனை (Accelerated Shelf Life Testing):

இந்த முறையானது, பொருளின் ஆயுளை கணிக்க, கட்டுப்படுத்தப்பட்ட, துரிதப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் (எ.கா., அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதமான நேரங்களில்) தயாரிப்பு எவ்வாறு நிலைக்கிறது என்பதை சோதனை செய்வார்கள். இவ்வாறு செய்வதன் மூலம், சாதாரண சேமிப்பு நிலைமைகளின் கீழ் தயாரிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை மதிப்பிட முடியும்.

6. பேக்கேஜிங் ஒருமைப்பாடு சோதனை (Packaging Integrity Testing):

ஈரப்பதம், காற்று மற்றும் ஒளி போன்ற வெளிப்புற விஷயங்களிலிருந்து தயாரிப்பைப் பாதுகாப்பதில் பேக்கேஜிங்கின் செயல்திறனை சோதனை செய்வார்கள். காரணம் சரியாக பேக்கேஜிங் செய்யப்பட்ட பொருள் ஆயுள் நீடித்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
உருளைக்கிழங்கு சிவ்டா மற்றும் சத்தான மாலாடு!
Expiry Date

காலாவதியாகும் தேதிக்குப் பின்னர் அந்த தயாரிப்புகளை உட்கொண்டால்?

உணவுப் பொருட்களை அவற்றின் காலாவதி தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு உட்கொள்வது பொதுவாக பாதுகாப்பானது, ஏனெனில் தயாரிப்பின் காலாவதி அதன் உத்தேசிக்கப்பட்ட நாட்களுக்குள்ளையே உள்ளது. காலாவதி தேதிக்கு பிறகு தயாரிப்புகளை உட்கொள்வது உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும். அதிக நாள் கெட்டு போகாத பொருட்களில்(தானியங்கள், பருப்பு வகைகள்) அதன் தரம் குறையக்கூடும். இது சுவை அமைப்பு அல்லது அதன் ஊட்டச்சத்து போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கும். பால், இறைச்சி மற்றும் முட்டை போன்ற சீக்கிரம் கெட்டுப் போகக்கூடிய பொருட்களுக்கு, (பிரிட்ஜில் சேமித்து வைத்தாலும்) காலாவதி தேதிக்கு மேல் அவற்றை உட்கொண்டால், அதில் நிகழ்ந்த பாக்டீரியா வளர்ச்சியால் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com