முட்டைக்குள் இருக்கும் கரு ஒரு உயிர், அதனால் முட்டை அசைவத்தை சார்ந்ததுதான். சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் இந்த வார்த்தைகளை உங்கள் வாழ்வில் எத்தனை முறை கேட்டுள்ளீர்கள்?
முதலில் இது உண்மையா?
முட்டை அசைவமா? சைவமா? என்ற சந்தேகம் பலரது வாழ்வில் தீரா விடையாக உள்ளது. அது அசைவம் என்று நிரூபிக்க பலரும், சைவம் என்று நிரூபிக்க சிலரும் போட்டிப்போட்டு முன்வருவார்கள். இறுதியில் யார் வெற்றிபெற்றார்கள் என்று மட்டும் தெரியவே தெரியாது. இப்போது இந்த தொகுப்பில் காணப்போகும் முடிவும், காரணமும் கூட பலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும்.
ஆனால், படித்துப் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். பின்னர் விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால், ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில், கேள்விகள் தொடரட்டும்.
சைவமா? அசைவமா?
முட்டை ஒரு சைவம்தாங்க…
ஆம்! முட்டையில் இரண்டு வகை உண்டு.
1. Diploid Eggs
2. Haploid Eggs
Diploid Eggs (Fertilized) என்றால், கருவுற்ற முட்டை. இந்த முட்டையில்தான் உயிர் இருக்கும். இந்த முட்டைகளைத்தான் கோழிகள் பொறித்து தனது குஞ்சுகளையும் பொறிக்கின்றன. இந்த முட்டைகளை நாம் சாப்பிடுவது கிடையாது.
Haploid Eggs (UnFertilized) என்றால் கருவுறாத முட்டை. இந்த முட்டையில் உயிரே இருக்காது. இதனைதான் கடைகளில் விற்கிறார்கள். இந்த முட்டைகளைதான் நாமும் சாப்பிடுகிறோம். அப்படியிருக்க எப்படி இது அசைவ உணவுகளில் வரும்.
அசைவம் என்பது விலங்கு மற்றும் பறவைகளின் உயிர், உடலாகும். ஆனால், முட்டை என்பது இதன் இரண்டிற்கும் இடைப்பட்டது. மேலும் இவை unfertilized.
இந்த தொகுப்பின் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் உச்சநீதிமன்றம் 2004ம் ஆண்டு முட்டை ஒரு சைவ உணவு என்பதை அறிவித்தது. இந்த உத்தரவை சும்மா மேலோட்டமாக அறிவிக்கவில்லை. நன்றாக கலந்தாலோசித்து, பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு எடுக்கப்பட்டது.
இதிலும் ஒரு விஷயம் உள்ளது. நீங்கள் ஒரு வேறுபாட்டை புரிந்துக்கொள்வது அவசியம். கடைகளில் வாங்கும் முட்டை மட்டுமே சைவம். ஆனால், வீட்டில் வளர்க்கும் கோழிகளின் முட்டையை சாப்பிடுவது அசைவ கணக்கில்தான் சேரும்.
இனி முட்டை சைவமா? அசைவமா? என்று கேட்பதை விட்டுவிட்டு, நீங்கள் சைவமா? அசைவமா? என்று கேட்டுக்கொள்ளுங்கள்.