
புளிச்ச கீரை சாதம்
தேவை:
சாதம் – இரண்டு கை அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
வர மிளகாய் – இரண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
அரைக்க
வெங்காயம் – இரண்டு
பூண்டு – பத்து பல்
மிளகு – ஒரு ஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஆறு
புளிச்ச கீரை – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை;
மேலே சொல்லப்பட்டுள்ள அரைக்கக் கொடுக்கப்பட்ட எல்லாவற்றையும் அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, இரண்டு வர மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள விழுதை இதனுடன் சேர்த்து வதக்கவும்.
உப்பு கொஞ்சம் சேர்க்கவும்.
இதனுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கிளவுரவும். சூடான, கலகலான புளிச்ச கீரை சாதம் தயார்.
*******
புளிச்சக்கீரை தொக்கு
தேவை:
கோங்குரா (புளிச்ச கீரை) - 2 கட்டு
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு ஸங
வர மிளகாய் - 20
புளி - எலுமிச்சை அளவு
சீரகம் - ஒரு ஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோங்குரா (புளிச்ச கீரை) இலைகளை மட்டும் கிள்ளி நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், வர மிளகாய், சீரகம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். இதை ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கோங்குராவை நன்கு சுருண்டு வரும் பதம் வரை வதக்கவும். கோங்குரா ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
இறுதியாகப் முதலில் அரைத்தவற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கி விடவும். நாவில் நீர் ஊறவைக்கும் கோங்குரா தொக்கு ரெடி.
*******
புளிச்சக்கீரை கடைசல்
தேவை:
புளிச்ச கீரை- ஒரு கட்டு
சின்ன வெங்காயம்- முக்கால் கப்
தக்காளி - 1
கத்திரிக்காய் - சிறியது 2
வர மிளகாய்- 4
புளி - சிறிதளவு
சர்க்கரை - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் டீ
உப்பு - முக்கால் டீஸ்பூன்
செய்முறை:
புளிச்சக்கீரையை நன்றாக அலசி ஒரு குக்கரில் இட்டு சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும். ஆறியதும் குக்கரை திறந்து நீரை வடிகட்டி விடவும்.
பின்பு வெந்த கீரையை மீண்டும் குக்கரில் இட்டு அதனுடன் வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், வரமிளகாய், உப்பு, மஞ்சள் தூள், புளி அனைத்தையும் சேர்த்து இரண்டு விசில் விடவும்.
ஆறியதும் மண் சட்டியில் ஊற்றி நீர் வற்ற கொதிக்கவிட்டு ஆறியதும் மத்து வைத்து கடையவும். மிகவும் துவர்ப்பாக இருந்தால் சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். துவர்ப்பு சுவை பிடிப்பவர்கள் வெல்லம் சேர்க்க தேவையில்லை.
இது சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.