
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நம்மில் பலரும் விரும்பி உண்ணும் பானி பூரி ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விதமான சுவை தருவதை போல் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப் படுகிறது.
இந்தியாவின் பிரபலமான தெரு உணவுகளில் பானி பூரிக்கு முதலிடத்தை தாராளமாக கொடுக்கலாம்.
இந்த உணவின் மிகவும் பொதுவான பெயர் பானி பூரி. இந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக வட இந்தியாவில் இந்த பெயர் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மொறுமொறுப்பான சற்றுக் காரமான வெற்று பூரியில் சுவையூட்டப்பட்ட நீர், பல மசாலா பொருட்களுடன் வேகவைத்த பட்டாணி மசித்த உருளைக்கிழங்கு வெங்காயம் மற்றும் சட் மசாலா ஆகியவற்றால் நிரப்பப்பட்டு வழங்கப்படுகிறது.
கோல் கப் என்பது வட இந்தியாவில் குறிப்பாக டெல்லி உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கிழக்கு இந்தியாவில் குறிப்பாக மேற்கு வங்காளம் பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இது புச்கா என அழைக்கப்படுகிறது.
ஒடிசாவின் சில பகுதிகளில் குப்சப் அழைக்கின்றனர்..
பானி கே பட்டாஷே என்பது ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பொதுவாக அழைக்கப்படும் பெயராக உள்ளது.
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் - 1 கப்
கொத்தமல்லி இலைகள் - 1 கப்
பச்சை மிளகாய் - 2-3
இஞ்சி - 1 சிறிய துண்டு
புளி - சிறிய எலுமிச்சை அளவு (ஊறவைத்தது)
ஜாட் மசாலா (Chaat Masala) - 1 டீஸ்பூன்
கருப்பு உப்பு (Black Salt / இந்துப்பு) - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
சாதாரண உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - 4-5 கப்
செய்முறை:
புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
இந்த விழுதை வடிகட்டி எடுத்து, மீதமுள்ள தண்ணீர், புளிக்கரைசல், ஜாட் மசாலா, கருப்பு உப்பு, சீரகப் பொடி, சாதாரண உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
சுவை சரிபார்த்து, பானியை குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) சில்லென்று பரிமாறத் தயாராக வைக்கவும்.
மசாலா (Stuffing)
தேவையான பொருட்கள்:
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 (நன்கு மசித்தது)
வேகவைத்த கொண்டைக்கடலை அல்லது பட்டாணி (உலர் வெள்ளை / பச்சை) - 1/2 கப்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த் தூள் - 1/4 டீஸ்பூன்
ஜாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - சிறிது
செய்முறை:
மசித்த உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக் கடலையை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
அதனுடன் அனைத்து மசாலா பொடிகள், உப்பு மற்றும் கொத்தமல்லியைச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.