
-கல்பனா ராஜகோபால்
கத்திரிக்காய் பூண்டு மசாலா ஸ்டஃப்
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் (நீள வகை) – 250 கிராம்
பூண்டு (உரித்தது) – 25 பல்
காய்ந்த மிளகாய் – 10
சீரகம் – 2 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
மிளகு – 1/4 ஸ்பூன்
கசகசா – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 200 மில்லி
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
செய்முறை:
1. அடுப்பில் வாணலியை வைத்து, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், சோம்பு சேர்க்கவும். பொரிந்ததும் கசகசா, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து மிளகாய் நிறம் மாறாமல் வறுத்து எடுத்து ஆறவிடவும்.
2. மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றி, உரித்த பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கிய பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்கி ஆறவிடவும்.
3. மிக்ஸியில் முதலில் வறுத்த மசாலா பொருட்களை தண்ணீர் விடாமல் இரண்டு சுற்று அரைக்கவும். பின்னர் வதக்கிய பூண்டு சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த மசாலா கலவையை சேர்க்கவும். எண்ணெய் பிரிந்ததும் பெருங்காயம் சேர்த்துக்கிளறி இறக்கவும்.
5. கத்திரிக்காய்களின் காம்பை மட்டும் சிறிது நீக்கி, நீளவாக்கில் கீறி வைக்கவும்.
6. ஆறிய மசாலா கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து, கீறிய கத்திரிக்காய்களில் ஸ்பூனின் உதவியுடன் ஸ்டஃப் செய்யவும்.
7. தவா / தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் தடவி, ஸ்டஃப் கத்திரிக்காய்களை பரப்பவும். ஒரு நிமிடம் மூடி வைத்து, பிறகு மெதுவாக ஒவ்வொன்றாக திருப்பவும்.
தோல் நிறம் மாறாமல் இரண்டு முறை திருப்பி எடுத்தால் போதும்.
பரிமாறுதல்:
இதற்கு சைவ மீன் ஃப்ரை போன்ற சுவை, மணம் இருக்கும்.
சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
சைடு டிஷ் ஆகவும் பரிமாறலாம்.
மீதமுள்ள மசாலாவை காற்றுப் புகாத ஜாரில் சேமித்து வைக்கலாம்.