தினமும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Health benefits
Benefits of ghee!
Published on

-ஆர். நெடுஞ்செழியன்

நெய் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப் பொருளாகும்.  தெளிந்த வெண்ணெய்  அல்லது பாற்கொழுப்பை உருக்கும்போது நெய் உருவாகின்றது. ஒரு கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது.

இது உடல் பருப்பதைத் தடுக்கிறது. நெய்யில் ஏறத்தாழ எட்டு விழுக்காடு அளவில் தாழ்நிலைச் செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் எளிதாகச் செரிக்கிறது.

தினமும் நெய் சேர்ப்பது  உடல் நலமும் மன வளமும் பாதுகாக்கப்படுகிறது. உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.

தினமும் காலையில் எழுந்ததும்  டீ  காபி குடிப்பதற்கு மாறாக . வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும். அதிகாலையில் ஒரு ஸ்பூன் நெய் உட்கொண்டு, பின் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால், நாம் நினைத்திராத அளவில் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

நெய்யை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் மூளைச் செல்கள் சுறுசுறுப்பு அடைவதோடு, மூளை நரம்புகள்  தூண்டப்பட்டு நினைவாற்றலும் புரிந்துகொள்ளும் திறனும் அதிகரிக்கும். அதோடு அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்கள் வராமலும் தடுக்கப்படும். உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்.

கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம். வெண்ணெயுடன் ஒப்பிடும்போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாகும்.

இதுதவிர மூட்டு இணைப்புக்கள் மற்றும் திசுக்கள் தொய்வடைவதைத் தடுத்து, மூட்டு வலி மற்றும் ஆர்த்டிக்ஸ் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

நெய்யை ஒருவர் வெறும் வயிற்றில் எடுக்கும்போது, அது உடலினுள் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஊட்டமளித்து சீராக இயங்கச் செய்வதால்  உடற்செல்கள் புத்துணர்ச்சி பெறும், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக செயல்படும்.

மேலும், சருமம் பொலிவோடு காட்சியளிக்கும். முக்கியமாக சருமம் வறட்சியடையாமல் மென்மையாக இருக்கும். அதுமட்டுமின்றி சொரியாசிஸ் போன்ற சரும பிரச்னைகளும் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
குளிர்சாதன பெட்டியில் இருந்து இவற்றை எல்லாம் உடனே வெளியே எடுங்கள்!
Health benefits

வாயுக்கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும். இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.

பெரும்பாலானோர் நெய் உடல் பருமனை அதிகரிக்க மட்டுமே செய்யும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தினமும் காலையில் 1 ஸ்பூன் நெய் உட்கொள்வதால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு உடல் எடை குறையும். தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும்.

நெய்யில் புற்றுநோய் செல்களை அழிக்கும் உட்பொருட்கள் உள்ளது. ஆகவே  வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிட புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை, அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை மாற்றும் 21 நாள் அற்புதம் தெரியுமா?
Health benefits

அப்படிப்பட்ட நெய்யை எவ்வாறு பாதுகாக்கலாம்?
எப்போதும் நெய்யை நன்கு மூடி, சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைக்கவும். நெய் அடிக்கடி பயன்படுத்துவதாக இருந்தால், குளிர்சாதன பெட்டியில் வைக்கவேண்டாம். மாறாக சுத்தமான கன்டெய்னரில், காற்று புகாதபடி அடைத்து வைத்தால், இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை, நெய் கெடாமல் இருக்கும்.

மேலும், வெப்பமான காற்றில் திறந்தால் நீர்கோர்த்து நெய்  கெட்டுவிட வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com