

குவாகமோல் (Guacamole) அவகாடோ சாண்ட்விச் மற்றும் வேகன் கிரீம் சீஸ் சாண்ட்விச் ரெசிபி.
தேவையான பொருட்கள்:
1.பழுத்த அவகாடோ பழங்கள் 2
2.முழு கோதுமை பிரட் ஸ்லைஸ் 2
3.நறுக்கிய தக்காளிப் பழ துண்டுகள் 2 டீஸ்பூன்
4.பொடிசா நறுக்கிய வெங்காயம் 2 டீஸ்பூன்
5.கொத்தமல்லி இலைகள் 15
6.நறுக்கிய ஜலபீனோ பெப்பர் 1 டீஸ்பூன்
7.லெமன் ஜூஸ் ½ டீஸ்பூன்
8.தேவையான அளவு உப்பு & மிளகு தூள்
9.ஃபீட்டா (Feta) சீஸ்
செய்முறை:
அவகாடோ பழத்தின் சதைப் பகுதியை எடுத்து நன்கு மசித்து ஒரு துண்டு பிரட் ஸ்லைஸ் மீது தடவிக் கொள்ளவும். அதன் மீது நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காய துண்டுகளைப் பரத்தவும். மேலே உப்பு, மிளகுத் தூள் தூவவும். பின் மிளகாய் துண்டுகள் மற்றும் மல்லி இலைகளை வைக்கவும். பிறகு சீஸை துருவி இலைகள் மீது தூவி, லெமன் ஜூஸை சேர்க்கவும்.பின் மற்றொரு பிரட் ஸ்லைஸை வைத்து மூடி உண்ணவும். அவரவர் விருப்பப்படி, வெள்ளரி, கேரட் என காய்கறிகளை மாற்றி உபயோகித்தும் இந்த சாண்ட்விச் செய்யலாம்.
வேகன் கிரீம் சீஸ் சாண்ட்விச் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.முழு கோதுமை பிரட் ஸ்லைஸ் 2
2.வேகன் கிரீம் சீஸ் 1½ டேபிள் ஸ்பூன்
3.வெள்ளரிக்காய் ஸ்லைஸ் 2-3
4.தக்காளி ஸ்லைஸ் 2-3
5.நறுக்கிய லெட்டூஸ் இலைகள்
6.முளை கட்டிய பாசிப் பயறு 2 டீஸ்பூன்
சில்லி சாஸ் அரை டீஸ்பூன்.
செய்முறை:
ஒரு துண்டு பிரட் ஸ்லைஸ் மீது வேகன் கிரீம் சீஸை தடவவும். அதன் மீது நறுக்கிய லெட்டூஸ் இலைகள், தக்காளி ஸ்லைஸ் மற்றும் வெள்ளரிக்காய் ஸ்லைஸ்களை வைக்கவும். பிறகு பாசிப்பயறை மேலே தூவி சில்லி சாஸ் சேர்த்து, மற்றொரு துண்டு பிரட் ஸ்லைஸை வைத்து மூடவும். ஆரோக்கியம் நிறைந்த வெஜிடபிள் வேகன் கிரீம் சீஸ் சாண்ட்விச் ரெடி.