செட்டிநாட்டு ஸ்டைலில் மணமணக்கும் பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி?

paruppu urundai kuzhambu
Fragrant lentil ball gravywww.youtube.com
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

திய உணவுக்கு எப்போதுமே சாம்பார், கூட்டு, புளிக்குழம்பு என சாப்பிட்டு போராடித்து விட்டதா? இதோ உங்களுக்கான அட்டகாசமான சுவையில் பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
உருண்டைக்கு:
கடலைப்பருப்பு– 1/4 கப்
துவரம் பருப்பு – 3/4 கப்
காய்ந்த மிளகாய் – 4
சோம்பு – அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு

குழம்பு செய்வதற்கு:
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் -  15
பூண்டு- 10 பல்
தக்காளி- 2
புளி- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
குழம்பு தூள்-  2 தேக்கரண்டி
வெந்தயம் – அரை தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :
முதலில் கடலை பருப்பு, துவரம் பருப்பை சுமார் 1 மணிநேரம் ஊறவைத்து, மிக்ஸியிலிட்டு  காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொண்டு சிறிய உருண்டைகளாக உருட்டி, இட்லி பாத்திரத்தில் வேகவைத்தபின் தனியே வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
விளாம்பழ ஜூஸ் முதல் ஸ்பெஷல் ரைஸ் வரை... ரெசிபி ரகசியம்!
paruppu urundai kuzhambu

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர், கருவேப்பிலை சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்த பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும், தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளி சேர்த்து மஞ்சள்தூள், குழம்பு தூள் சேர்க்கவும்.

நன்றாக கொதி வந்ததும் உருண்டைகளை போட்டு சிறிது நேரம் வேகவிடவும், கடைசியாக அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொத்தமல்லி தழை போட்டு இறக்கினால் சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார்!

-இரவிசிவன்

logo
Kalki Online
kalkionline.com