
நூடுல்ஸ்னாலே பல பேருக்கு ஒரு ஃபேவரட் உணவா இருக்கும். அதை வெறும் மசாலா மட்டும் போட்டு செய்யாம, கொஞ்சம் வித்தியாசமா, ரொம்ப டேஸ்ட்டியா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். அதுதான் சில்லி சீஸ் நூடுல்ஸ். காரமான மிளகாயும், கிரீமியான சீஸும் சேர்ந்து நூடுல்ஸ்க்கு ஒரு வேற லெவல் டேஸ்ட் கொடுக்கும். திடீர்னு ஏதாவது சாப்பிடணும்னு தோணுனா, இல்லன்னா குயிக்கா ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யணும்னா இது ஒரு பெர்ஃபெக்ட் சாய்ஸ். வாங்க, இந்த யம்மியான நூடுல்ஸ் எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
எண்ணெய் அல்லது வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 4-5 பல்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - கால் கப்
குடைமிளகாய் - கால் கப்
பால் - 1 கப்
சீஸ் - அரை கப்
சில்லி ஃபிளேக்ஸ் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - நூடுல்ஸ் வேக வைக்க
செய்முறை:
ஒரு பாத்திரத்துல தண்ணிய ஊத்தி சூடு பண்ணுங்க. தண்ணி கொதிக்க ஆரம்பிச்சதும் நூடுல்ஸ போட்டு பாக்கெட்ல இருக்கிற இன்ஸ்ட்ரக்ஷன் படி வேக வச்சுக்கோங்க. நூடுல்ஸ் வெந்ததும் தண்ணிய வடிகட்டி, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊத்தி லேசா கலந்து வச்சுக்கோங்க அப்போதான் ஒட்டாம இருக்கும்.
இப்போ ஒரு கடாய இல்லனா பேன அடுப்புல வச்சு எண்ணெய் இல்லனா வெண்ணெய் ஊத்தி சூடு பண்ணுங்க. சூடானதும் நறுக்கின பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிஷம் வதக்குங்க. வெங்காயம், குடைமிளகாய் சேர்க்கிறதா இருந்தா இப்போ சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வர்ற வரைக்கும் வதக்குங்க.
அடுத்ததா பால ஊத்தி சூடு பண்ணுங்க. பால் சூடானதும் அடுப்ப சிம்ல வச்சுட்டு, சீஸ் ஸ்லைஸ் இல்லனா துருவின சீஸ சேருங்க. சீஸ் நல்லா உருகி கிரீமியான சாஸ் மாதிரி ஆகுற வரைக்கும் கை விடாம கிளறிட்டே இருங்க.
சீஸ் சாஸ் ரெடி ஆனதும், சில்லி ஃபிளேக்ஸ், மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ், தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நல்லா கலந்து விடுங்க. உப்பு கவனமா சேருங்க, சீஸ்லயும் நூடுல்ஸ்லயும் இருக்கும்.
கடைசியா வேக வச்ச நூடுல்ஸ இந்த சீஸ் சாஸ்ல சேர்த்து, எல்லா நூடுல்ஸ்லயும் சாஸ் படுற மாதிரி மெதுவா கலந்து விடுங்க. காரமும் கிரீமியும் கலந்து, சுவையான சில்லி சீஸ் நூடுல்ஸ் ரெடி. இதை சூடா உடனே பரிமாறி என்ஜாய் பண்ணுங்க.