
அன்றாட வேலை பளு காரணமாக பலரும் பழைய உணவுகளையே சூடு படுத்தி சாப்பிடுவார்கள். இதில் பல உணவுகள் விஷமாக மாறும் தன்மையை கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
உணவு என்பது நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும். பழங்காலத்தில் பெரிதளவு அடுப்பு வசதி இல்லாததாலும், விவசாயம் செய்து கொண்டிருந்ததாலும் அவர்கள் இயற்கையாகவே சாதம் வடித்து, கஞ்சி, கம்பு என சாப்பிட்டு வந்தனர். அதை மறு நாள் வைத்து கூட பழைய சாதமாக சாப்பிட்டு வந்தனர். ஆனால் இயற்கையாக அவர்கள் அது கிடைக்கப்பெற்றதால் அதில் நிறைய சத்து இருந்தது.
ஆனால் தற்போது விவசாயமே செயற்கை முறையில் வந்துவிட்டது. இப்படி இருக்கையில் ஏற்கனவே நாம் உண்ணும் உணவில் பல பிரச்சனைகள் இருக்கும் வேளையில், தற்போது நாம் செய்யும் செயல், அது மேலும் உடலுக்கு பிரச்சனைகளை கொடுக்கு,ம் என சொல்லப்படுகிறது. அதாவது தற்போது ஆண், பெண் என இருவரும் வேலைக்கு செல்வதால், பழைய குழம்பை சூடாக்கி சாப்பிடுவது, காய்கறிகளை முந்தைய நாளே நறுக்கி வைத்து கொள்வது என நவீனமாக மாறிவிட்டனர். இது சூழ்நிலை என்றாலும் இதில் சில பிரச்சனைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதிலும் சில உணவுகளை கட்டாயமாக மீண்டும் சூடு பண்ணி சாப்பிடக்கூடாதாம். அப்படி சாப்பிட்டால் அது விஷமாக மாறி உயிரை கொல்ல கூட செய்யும் எனவும் கூறப்படுகிறது. அன்றாடம் உட்கொள்ளும் சில உணவுகள் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட பிறகு பாதுகாப்பாக இருக்காது. ஏனெனில் அது ஊட்டச்சத்து மதிப்பை இழந்து விடும்.பொதுவாகவே அதிக புரத சத்து உள்ள உணவுகளை மீண்டும் சூடுபடுத்தக் கூடாது. அது உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்குமாம்.
நைட்ரேட்ஸ் நிறைந்த காய்கறிகள்:
அதிக நைட்ரேட்ஸ் நிறைந்த காய்கறிகளான கீரை, கேரட், முள்ளங்கி ஆகியவைகளை மீண்டும் சூடு பண்ணும் போது அது விஷமாக மாறிவிடுமாம். இதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலர் கெட்டு போய் விடும் என்று கூட சூடு பண்ணுவார்கள். அப்படியும் செய்யக்கூடாது என சொல்லப்படுகிறது.
சாதம்:
வேகவைத்த சாதத்தை தண்ணீர் ஊற்றி பழைய சாதமாக சாப்பிடுவது நன்மையே கொடுக்கும். ஆனால் ஏற்கனவே வேகவைத்த சாதத்தை மீண்டும் சூடு பண்ணுவது அதிலுள்ள பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியாவை விஷமாக மாற்றிவிடுமாம்.
முட்டை:
புரோட்டீன் நிறைந்த முட்டையில் நைட்ரஜனும் அதிகமாக இருக்குமாம். இதை மீண்டும் சூடுபடுத்துவதன் மூலம் அது விஷமாக மாறும் என கூறப்படுகிறது. அதனால் தான் வெளிநாடுகளில் முட்டையை ஓடுகளோடே வைத்திருப்பார்கள். தேவையான போது ஓடை உடைத்து சாப்பிடுவார்கள்.
சிக்கன்:
பலரும் கவனித்தில் கொள்ள வேண்டியது இந்த உணவு தான். ஏனென்றால் இந்த தவறை அதிகம் பேர் செய்கிறார்கள். இதை செய்து சிலர் இறந்திருக்கிறார்கள் என்று ஆய்வு கூறிய பிறகும் மக்கள் இதை செய்வதை நிறுத்திய பாடில்லை. சிக்கனை மறுநாள் சாப்பிடுவதே தவறு. இதில் அதை பிரீட்ஜில் வைத்து அதன் தன்மை மாறிய பிறகு மறுநாள் சூடு படுத்தி சாப்பிடுவதால் உடலுக்கு பல பிரச்சனைகளை கொடுக்குமாம்.
கிழங்கு வகைகள்:
உருளை கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகையான உணவுகளை மீண்டும் சூடுப்படுத்த கூடாதாம். இதனால் கிருமிகள் வளர்ந்து வயிற்று பிரச்சனையை ஏற்படுத்துமாம்.
எண்ணெய்:
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை சேமித்து மீண்டும் வேறு ஒரு உணவிற்கு பயன்படுத்தும் பழக்கம் பலருக்கும் உண்டு. எண்ணெய்யில் ஒமேகா 3 ஃபேட்டிக் ஆசிட் அதிகமாக இருக்கும் என்பதால் அதை மீண்டும் மீண்டும் சூடாக்கி உபயோகப்படுத்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.