க்ரிஸ்பியான பிரட் ஆலு போண்டா சுலபமாக செய்வது எப்படி?

Bread and potatoes bonda
Bread and potatoes bonda
Published on

ஹோட்டல்களில் க்ரிஸ்பியான பிரட் உருளைக்கிழங்கு போண்டாவை வாங்கி சாப்பிடுவோம். எண்ணெய் குடிக்காமல், பார்ப்பதற்கு அழகாக நம்மை சாப்பிட இழுக்கும். அந்த உருளைக்கிழங்கு போண்டாவை நம் கையாலேயே,  வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

உருளைக் கிழங்கு 2

கேரட், பீன்ஸ், கோஸ் (நறுக்கியது) – கால் கப்

பச்சைப் பட்டாணி – கால் கப்

நறுக்கிய வெங்காயம் அரை கப்

தக்காளி 1

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத் தூள் அரை டீஸ்பூன்

கரம் மசாலா தூள் ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் சிறிதளவு

பிரட் ஒரு பாக்கெட்

பால் அரை லிட்டர் (காய்ச்சியது)

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுந்து – அரை டீஸ்பூன்

மல்லித் தழை, கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

உருளைக் கிழங்கை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து, மசித்துக்கொள்ளுங்கள்.

பச்சைப் பட்டாணியை வேகவைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத்தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

அதனுடன் கேரட், பீன்ஸ், கோஸ் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, பிறகுதக்காளியைச் சேர்த்து வதக்குங்கள்.

இதையும் படியுங்கள்:
டயட்டில் இருப்பவரா நீங்க? எண்ணெய் இல்லாத சுவையான ஓட்ஸ் அடை ரகசியம்!
Bread and potatoes bonda

பிறகு மிளகாய்த் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாகக்கிளறுங்கள்.

மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, மல்லித் தழை, கறிவேப்பிலை சேர்த்துசுருள வதக்கி இறக்கிவையுங்கள்.

பிரெட் துண்டின் ஓரங்களை நீக்கிய பிறகு, பாலில் ஒவ்வொன்றாக நனையுங்கள்.

மசாலாவை நடுவில் வைத்து உருண்டையாக உருட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

எண்ணெயை நன்றாக சூடு செய்துவிட்டு, அதன்பின்பு போண்டாக்களை விட்டு பொன்னிறமாக சிவக்க வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். சூப்பரான உருளைக்கிழங்கு போண்டா தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com