வீட்டிலேயே சுவையான ‘நாண்’ செய்வது எப்படி?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

 naan Recipe
How to make delicious 'naan' at home?

‘நாண்’ என்பது இந்தியாவில் பிரபலமாக சாப்பிடப்படும் ஒரு ரொட்டி வகை. இது மிகவும் மென்மையாகவும், சூடாகவும், சுவையாகவும் இருக்கும். பொதுவாக இதை தந்தூரி அடுப்பில் வேகவைத்து கறி வகைகள் மற்றும் குழந்தைகளுடன் பரிமாறுவார்கள். ஆனால் இதை வீட்டிலேயே நீங்கள் எளிதாக செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் இந்த நாண் ரொட்டியை எப்படி செய்வது என இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • 3 கப் (400 கிராம்) மைதா

  • 1 டீஸ்பூன் (5 கிராம்) உப்பு

  • 1 டீஸ்பூன் (5 கிராம்) பேக்கிங் பவுடர்

  • 1/2 டீஸ்பூன் (2.5 கிராம்) பேக்கிங் சோடா

  • 1 டேபிள் ஸ்பூன் (15 கிராம்) சர்க்கரை

  • 1/2 கப் (125 மிலி) தயிர்

  • 1/4 கப் (60 மிலி) வெதுவெதுப்பான நீர்

  • 2 டேபிள் ஸ்பூன் (30 மிலி) எண்ணெய்

  • சிறிது எள் விதைகள் (அலங்கரிக்க)

செய்முறை: 

ஒரு பெரிய கிண்ணத்தில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் அதில் தயிர் மற்றும் வெதுவெதுப்பான நீரை சேர்த்து மென்மையான மாவு பதத்திற்கு பிசையவும். தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள். 

பின்னர் தயாரித்த மாவில் எண்ணெய் தடவி ஈரமான துணியால் 30 நிமிடங்கள் அப்படியே ஊற விடுங்கள். 30 நிமிடங்கள் கழித்து மாவு உப்பி வந்ததும் அதை சிறு சிறு உருண்டைகளாக பிரிக்கவும். ஒவ்வொரு உருண்டைகளையும் மெல்லிய ரொட்டி போல தட்டுங்கள். ரொட்டிகளை தட்டும் போது மேலே எள் தூவுங்கள். 

இதையும் படியுங்கள்:
மைதா உணவுகளை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? மீறி சாப்பிட்டா? 
 naan Recipe

இப்போது ஒரு இரும்பு தவாவை அடுப்பில் வைக்கவும். நான்ஸ்டிக் பயன்படுத்த வேண்டாம். தவா சூடானதும் அதன் மேலே சிறிதளவு தண்ணீர் தெளித்து, தட்டி வைத்துள்ள ரொட்டியை அதில் போடவும். சிறிது நேரம் வெந்ததும், ரொட்டியானது தோசை கல்லில் நன்றாக ஓட்டிக் கொள்ளும். இப்போது தோசைக்கல்லை அப்படியே திருப்பி அப்படியே நெருப்பில் வாட்டினால், தந்தூரி அடுப்பில் செய்யும் நாண் போல சூப்பராக உப்பி வரும். 

இறுதியாக நாண் வெந்ததும், மேலே கொஞ்சம் வெண்ணெய் தடவி சூடாக பரிமாறினால் வேற லெவல் சுவையில் இருக்கும். இதை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com